நீண்ட நேர மின்வெட்டு தொடரும் : இலங்கை மின்சார சபை

Published By: Digital Desk 3

31 Mar, 2022 | 04:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் பற்றாக்குறை, வரட்சியான காலநிலை உள்ளிட்ட காரணிகளினால் 13 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையினை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 

எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு பின்னர் மின்விநியோக தடையினை 4 மணித்தியாலங்கள் அளவு மட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினான்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகபிரிவில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின்னுற்பத்தி நிலையங்களினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கும்,மின்பாவனைக்கு தற்போது எழுந்துள்ள கேள்விக்கும் இடையில் பாரியதொரு இடைவெளி காணப்படுகிறது.

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிக்கல் காணப்படுகின்ற பட்சத்தில் நாளாந்தம் மின்பாவனைக்கான கேள்வி 2,800 மெகாவாட் அலகினை காட்டிலும் உயரளவில் காணப்படுகிறது.

2014ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய மின்விநியோக கட்டமைப்பிற்கு மின்சாரத்தை இணைக்கும் வகையில் புதிய மின்நிலையங்கள் ஸ்தாபிக்கப்படாததால் 300 மெகாவாட் தொடக்கம் 900 மெகாவாட் வரையிலான மின்சாரத்திற்கு கேள்வி நிலவுகிறது.

கடந்த மூன்று மாதகாலமாக எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்னுற்பத்தியில் காணப்பட்ட பாதிப்பு வரட்சியான காலநிலை தொடர்வதால் தற்போது தீவிரமடைந்துள்ளது.

தனியார் நிறுவனங்களிடமிருந்து 2,000 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்யும் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையிலும், அதனை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாத தன்மை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்போது கட்டம் கட்டமாக இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் கிடைக்கப்பெறுகிறது.

நீர் மின்னுற்பத்தி 20 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதால் நாளாந்தம் 10 மணித்தியாலத்தை காட்டிலும் மின்விநியோக தடையினை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எதிர்வரும் 2 ஆம் திகதி கிடைக்கப்பெறவுள்ள ஒருதொகை டீசல் மின்னுற்பத்தி நடவடிக்கைக்கு முழுமையாக பயன்படுத்தப்படும்.

2 ஆம் திகதிக்கு பின்னர் மின்விநியோக தடையினை 4  மணித்தியாலங்கள் அளவு மட்டுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06