பறக்கும் கடதாசி

Published By: Digital Desk 3

31 Mar, 2022 | 10:02 AM
image

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பத்திரிகைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றன. அதாவது செய்தித்தாளாக இருக்கும்போது அதற்கு ஒரு விலை, செய்தித்தாள் பழைய நாளிதழாக மாறும் பொழுது அதற்கு ஒரு விலை. பலர் பழைய பேப்பர் வாங்கி விற்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர்.

சரி இவற்றுக்கு மத்தியில் இலங்கை, இந்தியாவில் பேப்பர் விலை ஒரே ஆண்டில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில்,  இலங்கையில் பல அரச நிறுவனங்கள் தங்கள் அறிவுறுத்தல்கள், விண்ணப்ப படிவங்கள், ஆவணங்கள் என்பவற்றை அச்சிடுவதை நிறுத்தியுள்ளன. விசேடமாக கல்வி அமைச்சு கூட மாணவர்களுக்கான சோதனையை பிற்போட உத்தேசித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் “ஓப் செட் பிரின்டிங்” பணிகளுக்கு 40 சதவீதம் (இந்திய ரூபாய் ) கட்டண உயர்வை மேற்கொள்ள தமிழகத்தில் பேப்பர் விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கையில் நூல்களை அச்சிடுட விரும்பும் ஆக்க எழுத்தாளர்கள் சென்னைக்கு ஓடிச் செல்வது வழக்கம். அங்கு குறைந்த விலையில் நேர்த்தியாக அச்சிட முடியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. பலர் தங்கள் திருமண அழைப்பிதழ்களைக்கூட அச்சிட தமிழகம் ஓடுவார்கள். போகும் போக்கில் இனி வாழை மடல்களில் தான் எழுத வேண்டிய நிலை ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.

சரி பேப்பர் உயர்வுக்கு காரணம் என்னவென்று பார்த்தால் வெளிநாட்டில் பத்திரிகை தயாரிப்புக்கான மூலப் பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் அவற்றின் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இலங்கையில் உள்ளூர் தேவைகளை ஈடுசெய்யக்கூடிய சுய உற்பத்தி இல்லாத போதிலும் தமிழகத்தில் பல உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.

டி.என்.பி. எல்., சேசாய், கோட்ஸ், பலார் பூர்.ஜே. கே. , ஆந்திரா பேப்பர் போன்ற பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் இயங்கி வந்தன. மூலப்பொருட்கள் இன்மையால் அவை தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தமட்டில் அவர்களின் ரூபாய்களின் மதிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டில் நியூஸ் பிரிண்ட் தொன் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. படிப்படியாக உயர்ந்து தற்போது 70 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகத்திலும் திருமண அழைப்பிதழ் தொடக்கம் புத்தகங்கள் வரை அனைத்து அச்சகங்களிலும் அச்சுப்பதிவுகளுக்கான விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட உள்ளதுடன் பலர் வேலை இழக்க உள்ளமை தான் பெரும் பேரிடியாக உள்ளது.

இந்தப் பின்னணியில் இலங்கையின் நிலைமைகளை கூறவே தேவையில்லை. விலையேற்றம் பத்திரிகையைக் கூட விட்டு வைக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18
news-image

தமிழ்ப் பொதுவேட்பாளர் ‘குதிரைக் கொம்பு’

2024-04-15 18:20:26