இலங்கை இந்தியாவின் பிராந்தியமா ? : இந்திய வெளிவிவகார அமைச்சர் சாதாரணமாக ஐ.ஓ.சி. க்கு சென்று பார்வையிடுகிறார் என்கிறார் முஜிபுர் 

30 Mar, 2022 | 05:04 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களின் படி இலங்கையை இந்தியாவின் ஒரு பிராந்தியமாக  கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கருதிகிறாரா ? இதனால் தான் ஐ.ஓ.சி.க்கு சென்று  அவர் கண்காணிப்புக்களில் ஈடுபட்டுள்ளார்  என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. 

எரிபொருள் பிரச்சினை இல்லை என்று வலுசக்தி அமைச்சர் தெரிவித்த போதிலும் , நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான வரிசைகளில் மாற்றம் இல்லை.

இலங்கையிலுள்ள வலு சக்தி அமைச்சருக்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்ற நிலையில் , இந்திய வெளிவிவகார அமைச்சர் மிகவும் சாதாரணமாக ஐ.ஓ.சி. க்கு சென்று பார்வையிடுகிறார். 

இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களின் படி இலங்கையை இந்தியாவின் ஒரு பிராந்தியமாக எண்ணி அவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றாரா?

அது மாத்திரமின்றி தற்போது கிடைக்கப்பெறும் டீசல் மற்றும் பெற்றோல் உள்ளிட்டவை தரக்குறைவானவை என்று தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனம் இதனை சோதிப்பதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என்றும் , பெற்றோலிய கூட்டுத்தாபனமே அதனை பரிசோதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

2015 க்கு முன்னரும் இதே நிலைமையே காணப்பட்டது. நாமே அந்நிலைமையை மாற்றியமைத்தோம். 

சர்வட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அனைவரும் அங்கு சென்று ஜனாதிபதிக்கு விரிவுரை நடத்தினர் இது சர்வதேசத்திற்குகாக அரசாங்கம் அரங்கேற்றியுள்ள நாடகமாகும். 

உணவு இன்மையால் அயல் நாட்டுக்கு தப்பிச் செல்லும் நிலைக்கு நாட்டு மக்களை சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டம் கொண்டு சென்றுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிலுள்ள ஏனைய அனைத்து கட்சிகளுக்கும் சவாலானதொரு கட்சியாக காணப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22