புதிய சமநிலை விலைப்பட்டியலுக்கு அமைவாக நீரிழிவு, இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்காக வழங்கப்படும் 48 அத்தியாவசிய மருந்து வகைகளின் விலைகள் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள முறைமை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் அறிவிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.