கழிப்பறை குழியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு ; சந்தேகநபர்கள் இருவர் கைது

Published By: Digital Desk 3

30 Mar, 2022 | 01:30 PM
image

(எம்.மனோசித்ரா)

பாணந்துறை - பிங்வத்த பகுதியில் ஹோட்டலொன்றின் கழிப்பறை குழியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்க்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிங்வத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு , அவரது சடலம் கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக குறித்த ஹோட்டல் முகாமையாளரால் நேற்றுமுன்தினம் பிங்வத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கடவத்தையிலுள்ள களியாட்ட விடுதியொன்றில் (கிளப்) தொழில்புரிந்து வந்துள்ளார். 

இந்நிலையில் அவர் சடலமாக மீட்க்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் சிலரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதோடு, சடலத்தை கழிப்பறை குழிக்குள் மறைத்து வைத்திருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பில் 28 மற்றும் 47 வயதுகளையுடைய பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை பிரதேசங்களைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பிங்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44