பேராதனை போதனா வைத்தியசாலை விவகாரம் ; இந்தியாவே உண்மை நண்பன்' என இலங்கையர்கள் பெருமிதம்

Published By: Digital Desk 3

29 Mar, 2022 | 03:50 PM
image

(நா.தனுஜா)

அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் மற்றும் வலி தெரியாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தும் மருந்து உள்ளடங்கலாக சத்திரசிகிச்சைகளின்போது பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தமது வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டின் காரணமாக ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் உள்ளடங்கலாக அனைத்து நோயாளர்களுக்கும் திட்டமிடப்பட்டிருந்த சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படுவதாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை பேராதனை போதனா வைத்தியசாலையினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச்செய்தி ஊடகவியலாளர் ஒருவரால் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்த நிலையில், அப்பதிவை மேற்கோள்காட்டி இலங்கைக்கு வருகைதந்திருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.

மருந்துப்பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டின் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டிருக்கும் செய்தி குறித்து கவலையடைவதாக அப்பதிவில் குறிப்பிட்டிருந்த அவர், இவ்விடயத்தில் இந்தியா எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்து உரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு ஆராயுமாறு தான் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சுமார் 45 நிமிடநேரத்தில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பில் பதிவிடப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் லமாவன்சவுடன் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் கலந்துரையாடியதாகவும் வழமையான மற்றும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவைப்படும் மருந்துகள் என்னவென்பது குறித்து அவரிடம் கேட்டறிந்ததாகவும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நடவடிக்கைகள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதாக நேற்றையதினம் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்தது.

எதுஎவ்வாறெனினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானித்துவருவதாகவும், இலங்கையின் மக்கள் பிரதிநிதிகள்கூட முன்னெடுக்காத நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்துவருவதாகவும், சீனா இலங்கையைக் கடன்பொறிக்குள் சிக்கவைக்கும் அதேவேளை மறுபுறம் இந்தியா உண்மையான அக்கறையுடன் அதன் நட்புநாட்டிற்கு உதவிவருவதாகவும் டுவிட்டர் பயனாளர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு, இந்தியாவிற்கு தமது நன்றியை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41