கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக உப்பு கரைசல் திரவம் செலுத்திய வைத்தியர் கைது

29 Mar, 2022 | 12:51 PM
image

சிங்கபூரில் உப்பு கரைசலை தடுப்பூசி என கூறி, நோயாளிகளுக்கு செலுத்தி அதிக கட்டணத்தை வசூலித்த வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

33 வயதான வைத்தியர் போலியாக நோயாளிகள் பெயரில் கணக்கை தொடங்கி, அந்த நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக முடிவுகளை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் தடுப்பூசிக்கு எதிரான குழுவில் ஒரு உறுப்பினராக உள்ளார். இதனால் தவறான தடுப்பூசி தகவல்களை சுகாதார அமைச்சகத்தின் தேசிய நோய்த்தடுப்பு பதிவேட்டில் பதிவேற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து, மருத்துவப் பயிற்சியாளராக அவர் பதிவு செய்ததை சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சில் (எஸ் எம் சி) மார்ச் 23 முதல், 18 மாதங்களுக்கு இடைநிறுத்தியுள்ளது.

அவரது இடைநீக்கம் "பொது உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் பொது நலனுக்காக அவசியம்" என்று மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது 

மேலும், தவறான தடுப்பூசி தரவுகளை சமர்ப்பித்து சுகாதார அமைச்சகத்தை ஏமாற்ற சதி செய்ததாக அவர் மீது நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டது.

தடுப்பூசிக்கு எதிராக செயல்பட்டு வருவதால், தன்னிடம் கொரோனா தடுப்பூசி செலுத்த வரும் நோயாளிகளுக்கு, கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக உப்பு கரைசல் திரவத்தை ஊசி வழியாக செலுத்தி, அதன்பின் அந்த நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக அவர் தேசிய பதிவேட்டில் பதிவேற்றி வந்துள்ளார்.

நோயாளிகளிடம் அவர்களுக்கு தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டு விட்டது என்பதற்கான போலி சான்றிதழையும் கொடுத்து அவர்களை ஏமாற்றியுள்ளார். 

அவரது நடவடிக்கைகள் பொது சுகாதார விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அவர் தவறிவிட்டார் என்று சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் வழக்கை விசாரிக்க ஒரு புகார் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அவருக்கு உதவியாக இருந்துவந்த அவரது உதவியாளர்  மீதும்  சுகாதார அமைச்சகத்தை  ஏமாற்ற சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வைத்தியர் கடந்த ஜனவரி 21ம் திகதியன்று, அவரது உதவியாளர்கள் ஆகியோருடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். 

சிங்கப்பூர் பெண் ஒருவர் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திக்கொண்டதாக தவறான தகவல்களை தேசிய பதிவேட்டில்  கொடுத்துள்ளனர் என்று அவர்கள் மூவர் மீது குற்றச்சாட்டு நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வைத்தியர் நடத்திவந்த 4 கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன.

நோயறிதல் மேம்பாட்டு மையத்தின் மருத்துவ நோயறிதல் ஆய்வகத்தில் வைத்தியர் ஆய்வக இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். 

இந்த ஆய்வகம் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையால் நிதியளிக்கப்படுகிறது மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கான அமைப்புகளால் வழிநடத்தப்படுகிறது. அந்த பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52