வசந்த சமரசிங்கவிடம் ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

29 Mar, 2022 | 01:32 PM
image

ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளரும், ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்கவிடம் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிராக  ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டம் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்காகவே அவர் இவ்வாறு நஷ்ட ஈட்டினைக் கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்த வசந்த சமரசிங்க அதில் , கலகெதர மற்றும் ரம்புக்கனை வரையிலான 20 கிலோமீற்றர் மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு  விலை மனு கோரப்பட்டது. 

மேற்கூறிய திட்டத்திற்கான  விலைமனு ஒப்புதல் சீ.ஏ.என்.சீ.  என  பெயரிடப்பட்ட  அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட  குழுவின்  விடயப்பரப்பின் கீழ் காணப்படுவதாகவும், சீன நிறுவனமான மெட்டலர்ஜிக்கல் கார்ப்பரேஷன் மற்றும் இலங்கை நிறுவனமான இலங்கை உட்கட்டமைப்பு அபிவிருத்தி கூட்டமைப்பு என்பன விலைமனுவை சமர்ப்பித்தன.

சீன நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 1050 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும்  (ரூ. 210 பில்லியன்) மற்றும் இலங்கை நிறுவனம் முன்வைத்த தொகை  1872 மில்லியன் டொலர் (ரூ. 374.4 பில்லியன்)  எனவும்  குறைந்த விலை சமர்ப்பித்த நிறுவனத்தை நிராகரித்து அதிக விலை கோரிய நிறுவனத்திற்கு  குழுவினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சரவைக் குழுவுக்கு அழுத்தம் பிரயோகித்து அதன் உறுப்பினர்களை நீக்க நடவடிக்கை எடுத்து விலைமனுவை நிராகரித்து சீன நிறுவனத்தின் விலைமனுவுக்கு ஆதரவாக செயற்பட்டு அதனூடாக மோசடி இடம்பெற பங்களித்ததாவும், இந்த நிதி மோசடியால் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு  சுமாராக  164.4 பில்லியன் ரூபாவாகும், இது பிரபல பிணைமுறி மோசடியை விட பத்து மடங்கு அதிகமாகும் என்று தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் தனது கட்சிக்காரர் மேற்படி  மோசடியை மேற்கொண்டிருப்பதாக தெரிவிப்பதன் ஊடாக ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை ஏமாற்றி தவறாக வழிநடத்தியதாகவும், இந்த செய்தியாளர் சந்திப்பு அவரது உத்தியோகபூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. அதன் இணைப்பு அவரது முகநூல் மூலம்  வெளியிடப்பட்டது. 

மேலும்  பொதுமக்களுக்கு அவற்றை பார்ப்பதற்கு இடமளித்ததன் ஊடாக  மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தி அதனை விளப்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உண்மைக்குப் புறம்பானதாகவும், அடிப்படையற்றதாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் கூறி, 14 நாட்களுக்குள்  தனக்கு நட்டஈடு வழங்குமாறு கோரி அவருக்கு  எதிராக  அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது  சட்டத்தரணி கசுன் வீரசேகர ஊடாக கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38