இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினரொருவரை கொலைசெய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள்  இராணுவ லெப்டினன் விமல் விக்ரம கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக 20 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளார்.

குறித்த இழப்பீட்டு தொகையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு வழங்கியுள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி மற்றுமொரு திருமணம் முடித்துள்ளதால், உயிழந்தவரின் மனைவிக்கு ரூபா 10 இலட்சமும், உயிழந்தவரின் தந்தைக்கு ரூபா 10 இலட்சமும் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ லெப்டினன் விமல் விக்ரமவுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 10 வருட சேவை இடைநீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.