எகிப்­திய ஜனா­தி­ப­தியின் புகைப்­ப­டத்தை உரு­மாற்றம் செய்து பேஸ்­புக்கில் வெளி­யிட்ட இளை­ஞ­ருக்கு சிறை 

Published By: Raam

22 Dec, 2015 | 09:20 AM
image

எகிப்­திய ஜனா­தி­பதி அப்டெல் பட்டாஹ் அல் சிஸியின் புகைப்­ப­டத்தை கணி­னியில் போட்­டோஷொப் மென்­பொ­ருளைப் பயன்­ப­டுத்தி அவர் சிறு­வர்­களின் சித்­திரக் கதை­களில் வரும் கேலிச் சித்­திர கதா­பாத்­தி­ர­மான மிக்கி மவுஸின் காது­க­ளை­யொத்த காது­களை அணிந்­தி­ருப்­ப­தாக உரு­மாற்றம் செய்து பேஸ்புக் இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட்ட அந்­நாட்டு மாணவர் ஒரு­வ­ருக்கு 3 வருட சிறைத் தண்­டனை விதித்து நீதி­மன்­ற­மொன்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

சட்டக் கல்­லூரி மாண­வ­ரான அமர் நொஹான் என்ற 22 வயது இளை­ஞரே இவ்­வாறு சிறைத் தண்­டனை விதிப்­புக்­குள்­ளா­கி­யுள்ளார். அவர் மீது ஆட்­சி­யா­ளரை அவ­ம­தித்­த­தாக குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right