ஆளுந்தரப்பின் முக்கிய உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சு - திஸ்ஸ அத்தநாயக்க

Published By: Digital Desk 3

28 Mar, 2022 | 04:20 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். 

இது தொடர்பான தகவல்கள் உரிய காலத்தில் வெளியிடப்படும். எனவே குறுகிய காலத்தில் அரசாங்கம் வீழ்ச்சியடைவது உறுதியாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தது. எனினும் தற்போது அனைத்து தரப்பினரும் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தியதையடுத்து தற்போது அறிக்கை நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் முதலாவது விடயமாக இலங்கையின் நிர்வாகம் , நிதி முகாமைத்துவம் என்பவற்றின் வீழ்ச்சியே நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வரையறையின்றி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டமை , வரி சலுகை உள்ளிட்ட தவறான தீர்மானங்கள் பல சமூக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளன. 

2019 - 2022 வரையான காலப்பகுதியில் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகையானது உற்பத்தி பொருளாதாரத்தை விட 95 - 119 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது.

கடன்களை மீள செலுத்துவதற்கு அந்நிய செலாவணி பயன்படுத்தப்பட்டமையின் காரணமாக , நாட்டில் தற்போதைய டொலர் இருப்பு பூச்சிய நிலையை அடைந்துள்ளது.

இதற்கான தீர்வினை பெற சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு பல தரப்பினரும் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் , அரசாங்கம் அதற்கு உரிய பதிலை வழங்கவில்லை.

அது மாத்திரமின்றி மத்திய வங்கி ஆளுனர் இதனை சீர்குழைக்கும் வகையில் டுவிட்டர் பதிவுகளை இட்டு வந்தாரே தவிர , உரிய தீர்மானத்தை வழங்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான விவாதம் அடுத்த வாரம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். 2019 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியுடன் ஒப்பிடும் போது தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பு 3 மடங்காக அதிகரித்துள்ளது. 

இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையை அரசாங்கம் பெருமையாகக் கூறிக் கொண்டிருக்கிறது. 

எனினும் இதற்காக நாட்டின் இறையான்மையை கேள்விக்குட்படுத்தும் வகையில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

எந்த தரப்பினர் எதனைக் கூறினாலும் அவற்றை ஏற்று செயற்படுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. எனவே அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளவர்கள் உள்ளிருந்து விமர்சித்துக் கொண்டிருக்காமல் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும். 

எவ்வாறிருப்பினும் இவ்வாறு அதிருப்தியிலுள்ள பெரும்பாலான ஆளுந்தரப்பினர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவல்கள் உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும். எனவே குறுகிய காலத்திற்குள் அரசாங்கம் வீழ்ச்சியடைவது உறுதியாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடிபாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம்...

2024-04-18 15:48:16
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52