பிம்ஸ்டெக்' : 5 ஆவது மாநாடு கொழும்பில் ஆரம்பமாகியது

Published By: Digital Desk 4

28 Mar, 2022 | 04:07 PM
image

(நா.தனுஜா)

'பிம்ஸ்டெக்' என்று அழைக்கப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் 5 ஆவது மாநாடு உறுப்புநாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளின் பங்கேற்புடன் திங்கட்கிழமை (28) கொழும்பில் ஆரம்பமானது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய 7 வங்காள விரிகுடா நாடுகள் அங்கம்வகிக்கும் இந்த பிம்ஸ்டெக் அமைப்பின் மாநாடு 4 வருடங்களுக்கு ஒருமுறை அதன் உறுப்புநாடுகள் ஒவ்வொன்றிலும் நடாத்தப்படும்.

அதன்படி அவ்வமைப்பின் 5 ஆவது மாநாடு இம்முறை 'வலுவான பிராந்தியம், வளமான பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான மக்களை நோக்கிய நகர்வு' என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

மாநாட்டில் முதல்நாளான இன்று பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே மற்றும் பிம்ஸ்டெக் அமைப்பின் செயலாளர் நாயகம் ரென்சின் லெக்ஃபெ ஆகியோர் தலைமைதாங்கியதுடன் உறுப்புநாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு நாடுகளினதும் உயரதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கத்துவம்வகிக்கும் நாடுகளைச்சேர்ந்த உயரதிகாரிகளின் 22 ஆவது கூட்டத்தின் ஆரம்பத்தில் தொடக்கவுரை ஆற்றிய வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, இம்முறை பிம்ஸ்டெக் மாநாட்டை இலங்கையில் நடாத்துவதையிட்டுப் பெருமிதமடைவதாகத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து ஏனைய உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளின் உரைகளும் இடம்பெறவிருந்தன. இருப்பினும் வெளிவிவகார செயலாளரின் உரையைப் பார்வையிடுவதற்கு மாத்திரமே ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் மாநாட்டின் இரண்டாம் நாளான நாளைய தினம் காலை 9.30 மணிக்கு உறுப்புநாடுகளின் அமைச்சுமட்டக்கூட்டம் நடைபெறவிருப்பதுடன் இதில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் உரையாற்றுவர்.

வங்களா விரிகுடா நாடுகளின் கூட்டிணைவான இந்த பிம்ஸ்டெக் அமைப்பின் 4 ஆவது மாநாடு நேபாளத்தில் நடைபெற்றதுடன் 6 ஆவது மாநாடு தாய்லாந்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44