பிரதமர் மோடி வராதது ஏன்?

28 Mar, 2022 | 01:04 PM
image

(ஹரிகரன்)

ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கைக்கு இது ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே அமைந்திருக்கிறது.

பிம்ஸ்டெக் எனப்படும் வங்காள விரிகுடா நாடுகளின் பலதுறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில், இலங்கை, இந்தியா,நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மியான்மார், தாய்லாந்து என 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

1997இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது விரிவாக்கப்பட்டு, பாகிஸ்தானும் அங்கம் வகிக்கும் சார்க் அமைப்புக்கு மாற்றாக ஒன்றான இந்தியாவினால் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த அமைப்பின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம், அதற்கு தலைமையேற்கும் வாய்ப்பை பெற முடியும் என்றும், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அழைத்து, உதவிகள், ஒத்துழைப்புகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

அந்த எதிர்ப்புக்கு அமைய பிம்ஸ்டெக் மாநாடு அமையவில்லை.

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக நாளை பிம்ஸ்டெக்  நாடுகளின் வெளிவிவகாரச் செயலாளர்களின் மாநாடும், நாளை மறுநாள் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடும் நடக்கவுள்ளன. 

இந்த இரண்டு கூட்டங்களிலும் 7 உறுப்பு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள், வெளிவிவகாரச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

ஆனால், பிம்ஸ்டெக் அமைப்பின் ஏழு உறுப்பு நாடுகளில், தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ சா தவிர வேறெந்த நாட்டின் தலைவரும், நேரடியாகப் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

நேபாளப் பிரதமர் ஷேர் பகதூர் டூபா இந்த மாநாட்டில் பங்கேற்க கொழும்பு வருவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த திங்கட்கிழமை கூடிய நேபாள அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் டூபா பிம்ஸ்டெக் மாநாட்டில், நேரடியாகப் பங்கேற்பதில்லை என்றும், மெய்நிகர் தொழில்நுட்பம் மூலமாகவே பங்கேற்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் பங்கேற்க 30ஆம் திகதி இலங்கை வருவார் என்று கூறப்பட்டது.

அவர் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கி, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார நிலையத்தை திறந்து வைத்த பின்னர், கொழும்பு சென்று மாநாட்டில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்தியத் தரப்பு அந்தப் பயணத் திட்டத்தை கடைசி நேரத்தில் இரத்துச் செய்து விட்டது.

தாய்லாந்து தவிர ஏனைய நாடுகளின் தலைவர்கள் மெய்நிகர் முறையிலேயே பங்கேற்பார்கள் என்று வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், இந்தியப் பிரதமரின் பயணத் திட்டம் குழப்பம் அடைந்தமைக்கான காரணம், அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-27#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48