உலகில் பணவீக்கம் உயர்மட்டத்திலுள்ள நாடுகளில் இலங்கை முன்னிலையில் - எரான் விக்கிரமரத்ன தகவல்

Published By: Digital Desk 3

28 Mar, 2022 | 10:41 AM
image

(எம்.மனோசித்ரா)

உலகில் பணவீக்கம் உயர்மட்டத்திலுள்ள நாடுகளில் இலங்கை முன்னிலையிலுள்ளது. பொருட்களின் விலை உயர்வினை சமநிலைப்படுத்துவதற்காக நாணத்தாள்களை அச்சிடுவதால் தீர்வு காண முடியும் என்று அரசாங்கம் எண்ணியது. 

அரசாங்கத்தின் இந்த தீர்மானமே நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கான காரணமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலகில் பணவீக்கம் உயர்மட்டத்திலுள்ள நாடுகளில் இலங்கை முன்னிலையிலுள்ளது. கடந்த காலங்களை விட பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. இரு ஆண்டுகளுக்குள் அந்நிய செலாவணி இருப்பு 80 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுனராக அரசியல்வாதியொருவரை நியமித்தமையே இதற்கான காரணமாகும். நிதி அமைச்சர் , திறைசேறி செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுனர் உள்ளிட்ட நிதி முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிக்கும் வரை நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது.

இனியும் நாட்டை முறையாக நிர்வகிக்க முடியவில்லை எனில் அதனை ஏற்றுக் கொண்டு இயலுமையுடையவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துச் செல்லுமாறு மீண்டும் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

உலகிலேயே அதிகளவு கடன் பெற்றுள்ள நாடு அமெரிக்காவும். அது உலகின் பலம் மிக்க தனவந்த நாடாகும். ஆனால் அந்நாட்டில் எரிபொருள் வரிசையோ அல்லது எரிவாயு வரிசையோ இல்லை. அதற்கு காரணம் சிறந்த நிதி நிர்வாகமாகும்.

அமெரிக்காவை உதாரணமாகக் கொண்டு அவதானிக்கும் போது கடன் பெறுவது பிரச்சினையல்ல. பெற்றுக் கொள்ளும் கடன் தொகையை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதே முக்கியத்துவமுடையதாகும். 

இலங்கையில் பொருளாதார வளர்ச்சி வேகத்தை விட , நாணயத்தாள்களை அச்சிடும் வேகம் அதிகமாகவுள்ளது. பொருட்களின் விலைகளை அதிகரித்ததோடு மாத்திரமின்றி , அவற்றுக்கு அதிகமாக பணம் அச்சிடப்பட்டமையே நாட்டில் தற்போதுள்ள பெரும் பிரச்சினையாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37