பல துறைகளில் தொழில் இல்லாமல்போகும் அபாயம் - ஐ.தே.க எச்சரிக்கை

Published By: Digital Desk 3

28 Mar, 2022 | 10:27 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இன்னும் ஒருசில மாதங்களில் பல துறைகளில் தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல்போகும் அபாயம் இருக்கின்றது. அதனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாட்டின் ஆட்சியை ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒப்படைக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு அழுத்தம்கொடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை நடத்திய சத்தியாக்கிர போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கின்றது. அந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. 

இந்நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கே ஐக்கிய தேசிய கட்சி சத்தியாக்கிர போராட்டம் ஒன்றை வெள்ளிக்கிழமை நடத்தி இருந்தது.

எமது சத்தியாக்கிரக போராட்டம் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண தேசிய கொள்கை திட்டம் ஒன்றை விரைவாக அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றோம். யார் அரசாங்கம் செய்தாலும் அனைத்து துறைகளுக்கும் பொதுவான தேசிய கொள்கை அமைத்து அதன் அடிப்படையில் ஆட்சி நடத்தவேண்டும். 

அதன் மூலமே தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அவ்வாறு இல்லாமல் ஒருபோதும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

அத்துடன் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பல துறைகளில் தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும். 

அதனால் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை விரைவாக ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒப்படைக்காவிட்டால் பல துறைகளிலும் தொழில்களை இழக்கவேண்டிய நிலை ஏற்படும். 

அவ்வாறு தொழில் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் தொழில் துறைகளில் பத்திரிகை நிறுவனங்களும் அடங்கி இருக்கின்றன. அதனால் மக்கள் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் கஷ்டம் தொடர்பில் அரசாங்கம் ஒரு துளியேனும் கண்டுகொள்வதில்லை. பிரச்சினைக்கு தீர்வுகாணவும் அரசாங்கத்துக்கு முடியாது.

அத்துடன் சர்வகட்சி மாநாட்டிலும் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு அரசாங்கம் எடுக்கவேண்டிய வேலைத்திட்டங்களை தெளிவுபடுத்தி இருந்தார். 

ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முற்படுமா என எமக்கு தெரியாது. அதனால்  நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தேசிய கொள்கை திட்டம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலே சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினோம். 

ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டிருந்தமை எமக்கு பாரிய வெற்றியாகும். இதில் கலந்துகொண்டிருந்த அனைவரும் நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15