காப்பாற்ற முனையும் விசுவாசிகள்

28 Mar, 2022 | 12:39 PM
image

(சத்ரியன்)

‘ஆமாம் சேர்’ என்று கூறி ஜனாதிபதியை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று இப்போது பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க.

பொலன்னறுவ மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேனவுடன் கடுமையாகப் மோதி, பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றியவர் அவர். ராஜபக்ஷ குடும்பத்தின் தீவிர விசுவாசிகளில் ஒருவர்.

அவரும், நாட்டின் நிலையைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, போன்றவர்கள், பஷில் ராஜபக்ஷவுடன் நேரடியாக மோதினர். அவருக்கு எதிராகவே செயற்பட்ட பதவிகளை இழந்தனர்.

ரொஷான் ரணசிங்க போன்றவர்கள், யாரையும் இலக்கு வைக்கவில்லை. ஆனால், ஜனாதிபதியைச் சுற்றியிருப்பவர்கள் அவரை தவறாக வழிநடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

“ஜனாதிபதிக்கு நாட்டு நிலைமைகள் தொடர்பில் சரியான தகவல்களை எவரும் கூறுவதில்லை.

நாட்டு நிலைமைகள் தொடர்பில் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் வாய் திறக்க முடியாத நிலையே காணப்படுகிறது. 

அமைச்சர்கள் பேசும்போதே வாயை மூடிக்கொண்டு இரு என்கிறார்கள்.  ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கும் அமைச்சர்கள் நாட்டில் பிரச்சினை இல்லை, கிராமங்களில் பிரச்சினை இல்லை, எல்லாம் சரியாக இருப்பதாகக் கூறி ஏமாற்றுகிறார்கள்.

இதனாலேயே 2015ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீட்டுக்கு செல்ல நேர்ந்தது.” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் தான், அரசாங்கத்தில் உள்ள பலருக்கு, 2015இல் மஹிந்த ராஜபக்ஷ வீட்டுக்குச் சென்றது நினைவுக்கு வரத் தொடங்கியிருக்கிறது ஆனால், இப்போதும்  ரொஷான் ரணசிங்க போன்றவர்கள், உண்மையைக் கூறுவதென்ற பெயரில், அவர்களைக் காப்பாற்றவே முற்படுகின்றனர்.

ஜனாதிபதிக்கு எதுவும் தெரியாது என்றும், அமைச்சர்கள் உண்மையை கூற முடியவில்லை என்றும், நியாயம் கற்பிக்கிறார்கள்.

இந்தக் கதையை நம்புவதற்கு நாட்டு மக்கள் ஒன்றும் முட்டாள்களில்லை.

இராஜாங்க அமைச்சர் றொஷான் ரணசிங்க இந்தக் கருத்தைக் கூறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களின் நெருக்கடி நிலையை தான் நன்கு அறிவேன் என்றும், அதனை தீர்க்க முற்படுவதாகவும் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில் நாட்டின் நிலைமை ஜனாதிபதிக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது, அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்பதெல்லாம், ராஜபக்ஷவினரைக் காப்பாற்றுகின்ற முயற்சிகள் தான்.

அதுவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதுவும் தெரியாது, அவருக்கு உண்மைகள் மறைக்கப்படுகிறது என்பதெல்லாம், மிகவும் அபத்தமான கருத்து.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-27#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54