ரஷ்ய ஆதரவும் அழுத்தங்களும்

28 Mar, 2022 | 12:41 PM
image

(சுபத்ரா)

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு இலங்கைக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

இந்த நெருக்கடி இலங்கையை நேரடியாகப் பாதிக்கிறது, இந்த விவகாரம், கிழக்கே ரஷ்யாவில் இருந்து மேற்கே அமெரிக்கா வரை கலந்துரையாடப்படுகிறது.

கடந்த 17ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸின் புலனாய்வுக்கான ஆயுதசேவைகள் உபகுழுவின் மூடிய அமர்வு ஒன்று இடம்பெற்றது. 

அதில், உக்ரேன் போர், அதன் உலகளாவிய தாக்கங்கள், இந்தப் போர் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுகள் எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறித்து, DIA எனப்படும், பாதுகாப்பு புலனாய்வு முகாமை அமைப்பின் தலைவர் லெப்.ஜெனரல் ஸ்கொட் பெரியர் (Lt. Gen.Scott Berrier) விளக்கமளித்தார்.

முன்னொருபோதும் இல்லாதளவுக்கு புலனாய்வுப் புரட்சி என்று உக்ரேன் போரை அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தளவுக்கு துல்லியமான புலனாய்வு ஒத்துழைப்பு கிடைத்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அங்கு உரையாற்றிய அமெரிக்காவின் சைபர் கட்டளைப் பணியகம் மற்றும் தேசிய பாதுகாப்பு முகாமை (NDA) ஆகியவற்றுக்குத் தலைமை தாங்கும் ஜெனரல் போல் நாகசோனி, (Paul Nakasone) தனது 35 ஆண்டு அனுபவத்தில்,  உக்ரைனுடன் நடந்ததை விட துல்லியமான, சரியான நேரத்தில் மற்றும் செயற்திறன் கூடிய புலனாய்வுதுறையின் சிறந்த பகிர்வை முன்னெப்போதும் பார்த்ததில்லை என்று கூறியிருக்கிறார்.

இதன்போது, அமெரிக்க காங்கிர ஸின் குடியரசுக் கட்சிப் பிரதிநிதியான ஒஸ்ரின் ஸ்கொட், இந்தப் போரினால், பொருட்கள் கிடைப்பது மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் சண்டையில் இருந்து 4000 மைல்கள் தொலைவில் உள்ள இலங்கை போன்ற நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரேன் கடந்த ஆண்டுகளில் 50 மில்லியன் மெட்ரிக் தொன் கோதுமையை, உலக உணவுத் திட்டத்திற்கு வழங்கும் மிகப்பெரிய விநியோகஸ்தர் என்பதால், உலக உணவு சந்தையில் உக்ரேனில் நடக்கும் போரின் தாக்கம் பற்றிய தகவலை இப்போதே சேகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

"தானியங்கள் அல்லது உரங்களை ஏற்றுமதி செய்யப் போவதில்லை என்று ரஷ்யா கூறுவது சிக்கலை அதிகப்படுத்துவதாகவும், ரஷ்யாவும் பெலாரஸும் சோளம், பார்லி மற்றும் சூரியகாந்தி விதைகள், கோதுமை மற்றும் உரம் ஆகியவற்றை உள்ளடக்கிய கருங்கடல் தானிய ஏற்றுமதி சந்தையை மூடுவதன் மூலம், விளாடிமிர் புட்டின் மூன்றாம் உலகப் போரைத் தொடங்கியுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

உக்ரேன் போரினால், உலகளாவிய ரீதியாக எரிபொருள், உணவு, உரம் போன்ற ஏற்றுமதிச் சந்தைகளில் பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த தாக்கம் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளை பாதித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்றனவும் கூட அதில் இருந்து விதிவிலக்கு இல்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-27#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13