மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - பிரதமர்

Published By: Digital Desk 3

28 Mar, 2022 | 09:05 AM
image

(எம்.மனோசித்ரா)

நெருக்கடியான நிலைமைகளிலேயே நாம் தற்போது உள்ளோம். அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் 20 ஆண்டு அரசியல் பூர்த்தியை முன்னிட்டு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்,

சிலர் அரசியல் ரீதியில் தமது மக்களின் பிரச்சினைகள் என்ன என்பது தொடர்பில் ஆராய்ந்து செயற்படுவதில் தோல்வியடைந்துள்ளனர். அவர்களுக்கு விமர்சனங்களை முன்வைக்க முடியும். 

அனைத்து செயற்பாடுகளை விமர்சிக்கக் கூடிய இயலுமை அவர்களுக்கு காணப்படுகிறது. அவர்களுக்கு பொறுப்புக்களை கையளித்த பின்னர் அவற்றை நிறைவேற்ற முடியாது என்பதை வரலாற்றில் காண்பித்திருக்கின்றனர்.

நாம் தற்போது நெருக்கடி நிலைமையிலேயே இருக்கின்றோம். அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் மக்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை அதனால் குறைக்க முடியாது. அவற்றை நாம் வழங்க வேண்டும். 

எனவே இயன்றவரை வழங்கக் கூடிய அனைத்தையும் வழங்குவோம். அரசாங்கம் என்ற ரீதியில் அதற்காக நாம் செயற்படுவோம்.

எனவே இன்று நாம் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்புடன் இருப்பதோடு , அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53