ஆயிரம் ரூபா சம்பளத்தினையும் 300 நாட்கள் வேலை நாட்களாகவும், நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என கோரி இன்று அக்கரபத்தனை பெல்மோரல், கிரன்லி, கிலஸ்டல் ஆகிய தோட்ட தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இதில் 800ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பெல்மோரல் கொழுந்து நிறுவை செய்யும் இடத்திலிருந்து பேரணியாக தோட்ட தொழிற்சாலை வரை சென்றனர்.

அங்கு சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள் தொழிற்சாலைக்கு முன்பு தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இவர்கள் உருவ பொம்மைகளை எரித்தும், டயர்களை எரித்தும், ஒப்பாரி வைத்தும் உடனடியாக கூட்டு ஒப்பந்தத்தினை முடித்து சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தமக்கு வழங்க வேண்டிய ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

(க.கிஷாந்தன்)