இலங்கைக்கு 2,000 தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்க சீனா தீர்மானம்

Published By: Digital Desk 3

26 Mar, 2022 | 09:58 PM
image

(நா.தனுஜா)

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கக்கூடிய உணவுத்தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு சுமார் 2.5 மில்லியன் டொலர் பெறுமதியில் 2,000 தொன் அரிசியை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குவதற்குத் தீர்மானித்திருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

அதன்படி மேற்படி உதவியை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வெள்ளிக்கிழமை (25) உறுதியளித்துள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் கி சென்ஹொங், தமது இயலுமைக்கு ஏற்றவாறு இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

இவ்விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் இவ்வாண்டுடன் 65 வருடங்களைப் பூர்த்திசெய்வதுடன் இருநாடுகளுக்கும் இடையில் இறப்பர் - அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இருநாடுகளும் பரஸ்பரம் உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் இலங்கை தற்போது உணவுத்தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்திருக்கும் பின்னணியில், அந்நாட்டு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, இலங்கைவாழ் சகோதர மக்களுக்கான அவசர உணவு உதவியாக 2,000 தொன் அரியை அன்பளிப்பாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.

இவ்வாறு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ள அரிசின் மொத்தப்பெறுமதி சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

கொவிட் - 19 வைரஸ் தொற்றின் தொடர்ச்சியாக தாக்கமும் மாறுதல்களுக்கு உள்ளாகிவரும் சர்வதேச நிலைவரங்களும் உலகளாவிய உணவுப்பற்றாக்குறை மற்றும் உணவை கப்பல் மூலம் விநியோகிப்பதற்கான இயலுமையின்மை ஆகியவற்றை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு நெருக்கடிநிலைக்கு மத்தியில் இருநாடுகளினதும் நிபுணர் குழுக்களும் அரிசி உற்பத்தியை முழுமைப்படுத்தல் மற்றும் அதனை கப்பல் ஊடாக இலங்கைக்குக் கொண்டுசெல்வதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளல் ஆகிய விடயங்களில் முனைப்புடன் ஈடுபட்டுவருகின்றன. 

அதன்மூலம் இலங்கைக்கான உணவு உதவியை இயலுமானவரை விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு இயலுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு சீனா தயாராக இருக்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44