ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (18) இரவு கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று இரவு 7 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் நிலை மற்றும் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.