அத்தியாவசிய தேவைகளை  நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் நாடு - விஜயகலா மகேஷ்வரன்

26 Mar, 2022 | 01:38 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

 

அத்தியாவசிய தேவைகளை  நிறைவேற்றிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமையை  நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர். 

சிறந்த எதிர்காலத்தை கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றிய வகையில் ஒன்றுப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

"நாட்டின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு கட்சி பேதங்களின்றிய வகையில்  எதிர்ப்பு போராட்டம்  இடம்பெற்றது.

வெண்மையான உடையினை அணிந்தே பலர் இதில் கலந்துக்கொண்டார்கள்.கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற காணி சுபீகரிப்பிற்கு எதிராக அமைதி வழி போராட்டத்தில் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கலந்துக்கொண்டு அமைதி வழி போராட்டத்தை ஊக்கவித்தார்.

நாட்டில் வாழும் மூவின மக்கள் யுத்த காலத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒருவருக்கொருவர்  உதவி செய்து கொண்டார்கள்.

தற்போதைய நிலைமையும் அவ்வாறானதொரு தேவையினை ஏற்படுத்தியுள்ளது.யுத்த காலத்தை காட்டிலும் தற்போது மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்கள் நாளாந்தம் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

நாட்டினதும்,நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்தின மக்களும் இன மத பேதங்களை துறந்து ஒன்றுபட வேண்டும் " என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47