வங்கி, நிதியியல் சேவைகள் மற்றும் காப்புறுதித் துறையில் பணியாற்ற சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு   

26 Mar, 2022 | 11:21 AM
image

இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

வங்கி, நிதியியல் சேவைகள் மற்றும் காப்புறுதித் துறையைச் சேர்ந்த பணியாற்றுவதற்கு சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. 

நிறுவனத்தினால் பணிச் சூழல் மற்றும் ஊழியர்களுக்கு வலுவூட்டுவது தொடர்பில் காண்பிக்கப்படும் உறுதியான அர்ப்பணிப்பு Great Place to Work (GPTW) அமைப்பினால் வழங்கப்பட்டுள்ள இந்த கௌரவிப்பினூடாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

GPTW அமைப்பினால் இந்தப் பிரிவின் கீழ் நிறுவனங்களை கௌரவித்திருந்த முதல் தடவையாக இது அமைந்திருந்தது.

இந்த பெருமைக்குரிய கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் பெருமை அடைவதாக தெரிவித்தார். 

சிறந்த பணியாற்றும் சூழலுடன், உண்மையில் நிறுவனத்தை பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடமாகத் திகழச் செய்யும் பல நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்திருந்தமையினூடாக இது சாத்தியமாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “பணியாற்றும் அனுபவத்தை நாம் எப்போதும் புத்தாக்கமான வழிமுறைகளில் மேம்படுத்தியுள்ளோம். இவற்றினூடாக நிறுவனத்தின் வினைத்திறன் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

ஈடுபாட்டு மற்றும் மகிழ்ச்சிகரமான பணியாற்றும் சூழலை பேணுவதில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு, GPTW அமைப்பிடமிருந்து கிடைத்த கௌரவிப்பாக இந்த தரப்படுத்தல் அமைந்திருப்பதாக கோம்ஸ் மேலும் குறிப்பிட்டார். 

வெற்றிகரமான பணியாற்றும் சூழலை ஏற்படுத்த வழங்கியிருந்த ஆதரவுக்கு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

“உறுதியான ஊழியர் பெறுமதித் தோற்றுவிப்பு என்பதில் எமது வெற்றிகரமான செயற்பாடு தங்கியுள்ளதுடன், ஈடுபாட்டையும் புத்தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய பணிச் சூழலை உருக்கிக் கொடுப்பதற்கான கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் போன்றவற்றிலும் அதில் தங்கியுள்ளது. 

அணி அங்கத்தவர்களுக்கு வலுவூட்டுவதில் அதிகளவு கவனம் செலுத்தப்படுகின்றது.” எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் நலனை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு தமது வீடுகளிலிருந்து பணியாற்றக்கூடிய வகையில் டிஜிட்டல் வசதிகளை துரித கதியில் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

“தூர நோக்குடைய காப்புறுதி சேவை வழங்குநர் எனும் வகையில், ஊழியர்கள் மற்றும் பணியிடங்கள் போன்றவற்றில் ஏற்படக்கூடிய தாக்கத்தை தாக்கத்தை தணிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை நாம் முறையாக மேற்கொண்டிருந்தோம்.” என்றார். 

வீடுகளிலிருந்து பணியாற்றுவது என்பது தற்போது நிறுவனத்தில் பரந்தளவில் பின்பற்றப்படுவதுடன், ஊழியர்களுக்கு நெகிழ்ச்சியான பணியாற்றும் நேரம் வழங்கப்பட்டுள்ளது. 

இது சிறந்த பெறுபேற்றுடனான கலாசாரத்தைத் தோற்றுவித்துள்ளது.

பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் ஆனிஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “நாம் வெற்றிகளைப் பதிவு செய்யும் நிறுவனம். ஊழியர்களுக்கு தமது முழுத் திறமைகளையும் வெளிப்படுத்த முடியும். 

எமது ஊழியர்களின் பெறுமதியை நாம் அறிந்திருப்பதுடன், அவர்களுக்கு பல்வேறு வழிகளில் நன்றி தெரிவிப்பதுடன், வெகுமதிகளையும் வழங்கி வருகின்றோம். 

பயில்வதற்கும் தம்மை வளர்த்துக் கொள்வதற்கும் புதிய வாய்ப்புகளை வழங்குவது, சிறந்த பணி-வாழ்க்கை சமநிலை மற்றும் ஆக்கத்தின் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை தூண்டும் கலாசாரம் ஆகியன இதில் அடங்குகின்றன.

ஆனிஃப் மேலும் குறிப்பிடுகையில், நிறுவனத்தின் வெற்றிகரமாக செயற்படச் செய்வதில் ஊழியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். ஏற்புடைமை, ஒன்றிணைந்திருத்தல் மற்றும் நோக்கம் ஆகியன தொடர்பில் உறுதியான உணர்வை நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றார். 

“எமது அணியான செயற்பாடு என்பது முழு நிறுவனத்திலும் தங்கியுள்ளது. இதனூடாக இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக திகழ்வதில் பெருமளவு பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

நிறுவனத்தினால் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதில் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சிகள், பல் திறன் விருத்தி நிகழ்ச்சிகள் மற்றும் ஊழியர் கௌரவிப்பு நிகழ்ச்சிகள் போன்றன அடங்குகின்றன. 

இவற்றினூடாக, ஊழியர்களின் விருத்தி மற்றும் தொழில்நிலையில் வெற்றிகரமான செயற்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகின்றது. 

ஊழியர்களுக்கு வலுச் சேர்த்து ஈடுபாட்டுடன் பேணும் பணியிடக் கலாசாரம் யூனியன் அஷ்யூரன்ஸினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் நலன் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் அதிகளவு கரிசனை கொண்டுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவலின் போது முன்னெடுக்கப்பட்ட தவிர்ப்பு செயற்பாடுகள் இதற்கு சான்றாக அமைந்திருந்தது. இந்த நெருக்கடியான காலப்பகுதியில், அணி அங்கத்தவர்களுக்கு அவசியமான ஆதரவு வழங்கப்படுவதை நிறுவனம் உறுதி செய்திருந்தது. 

அணி அங்கத்தவர் ஒருவர் தொற்றுக்காளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு அவசியமான உதவிகள் மற்றும் வழிகாட்டல்கள் முறையாக வழங்கப்பட்டிருந்தன. 

அவ்வாறான சூழலில் அவர்கள் எதிர்நோக்கியிருந்த அச்சம் மற்றும் அழுத்தமான உணர்வு போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்கு உதவியாக அமைந்திருந்தது.

தகைமை வாய்ந்த நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களினூடாக இலவசமாகவும் இரகசியத்தன்மை வாய்ந்த வகையிலும் உளவியல் ஆரோக்கிய ஆதரவு வழங்கப்பட்டிருந்தது.

 பரிசோதனை, ஆலோசனை மற்றும் வைத்தியசாலை அனுமதி தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு கொவிட்-19 ஹொட்லைன் இலக்கமும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு பக்கேஜ்கள் வழங்கப்பட்டிருந்தன. 

அத்தருணத்தில் அவர்களுக்கு அவை ஆறுதலாக அமைந்திருந்தன.

பல்வேறு தலைப்புகளில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அமர்வுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் அடிக்கடி முன்னெடுக்கின்றது. 

பணியிடத்தில் களிப்பை ஊக்குவிப்பதற்கு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருடன் மெய்நிகரான முறையில் ஈடுபாட்டை பேணும் – ஹெப்பி ஹவர்ஸ் (மகிழ்ச்சிகரமான மணித்தியாலங்கள்) என்பதையும் ஏற்பாடு செய்கின்றது. 

வீடுகளிலிருந்து பணியாற்றும் அழுத்தம் மற்றும் ஊழியர்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்காக மாதாந்தம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது.

நிறுவனம் “புதிய வழமை” என்பதை வினைத்திறனான முறையில் பின்பற்றியுள்ளது. அணியில், பிரிவுகளில் மற்றும் நிறுவன மட்டத்தில் ஊழியர்களுடன் தொடர்புகளை பேணுவதற்கு பல்வேறு ஈடுபாட்டு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. 

தமது இருப்பிடங்களிலிருந்து பணியாற்றிய போதிலும், அணியினர் ஊக்கத்துடனும், ஈடுபாட்டுடனும் செயலாற்றுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். 

காலாண்டு அடிப்படையிலான மெருகேற்றங்கள் மற்றும் ஹெப்பி ஹவர்ஸ் (மகிழ்ச்சிகரமான மணித்தியாலங்கள்) போன்றவற்றினூடாக பணி மற்றும் பொழுது போக்கு அம்சங்களிடையே சிறந்த சமநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. 

துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 17.3 பில்லியனைக் கொண்டுள்ளது. 

ஆயுள் நிதியமாக ரூ. 49.8 பில்லியனையும், 2021 டிசம்பர் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 228% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. 

நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதிநிதிகள் மனித வளங்கள் பிரிவின் முகாமையாளர், கித்மி ஜயதிலக மற்றும் திறன் கையகப்படுத்தல் மற்றும் ஊழியர் வர்த்தக நாமங்கள் உதவி முகாமையாளர் உத்தரா கபுகமகே ஆகியோர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58