கடவத்தை துப்பாக்கிச்சூடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 4 விசேட விசாரணைக்குழுக்கள்

25 Mar, 2022 | 11:56 PM
image

(எம்.மனோசித்ரா)

கடவத்தை பகுதியில் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 4 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

வியாழக்கிழமை (24) கடவத்தை பொலிஸ் பொலிஸ் பிரிவில் கொழும்பு - கண்டி வீதியில் 9 ஆம் தூணுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் மீது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் டி.56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கிரிபத்கொட மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 30 மற்றும் 31 வயதுகளையுடைய பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். 

இவர்கள் இறைச்சி கடை மற்றும் சில்லறை விற்பனை நிலையமொன்றில் தொழில் புரிபுவர்களாவர்.

இதன் போது பயன்படுத்தப்பட்ட டி.56 ரக துப்பாக்கிக்கு உபயோகிக்கும் துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு களனி ஸ்தள குற்ற விசாரணைப்பிரிவினர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தில் நேரடி சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட மோதலே துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

களனி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அதே வேளை, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு 4 விசேட விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கடவத்தை பொலிஸ் நிலையம் , களனி குற்ற விசாரணைப்பிரிவு , கிரிபத்கொட உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய இவ்விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

குறித்த பொலிஸ் பிரிவின் புலனாய்வு பிரிவினரும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17