உலக நீர் தினம் 2022 –  நீர் வழங்கவும் நீர் வளங்களை பாதுகாக்கவும் Brandix தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளது

25 Mar, 2022 | 11:57 PM
image

மார்ச் 22ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக நீர் தினத்தை முன்னிட்டு, சமூகத்தாருக்கு தூய நீரையும் கழிவகற்றும் வசதிகளையும் வழங்கி அதனூடாக வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயலாற்றுவதுடன், சர்வதேச காலநிலை மாற்றத்தின் சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதற்கு நீரைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் Brandix அடையாளம் கண்டுள்ளது.

சுமார் ஒன்றரை தசாப்த காலத்துக்கு முன்னதாக, Brandix தனது ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் தனது மனுசத்கார திட்டத்தின் கீழ் தூய நீரைப் பெற்றுக் கொடுப்பதற்கு தன்னை அர்ப்பணித்திருந்தது.  

மட்டக்களப்பு முதல் கொக்கல வரையில் நாட்டின் சகல பாகங்களிலும் 4200 ‘Care for Our Own’ திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதனூடாக, Brandix குழுமத்தினால் சகல ஊழியர்களுக்கும் பருகுவதற்கும், வீட்டுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கும் தூய குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமையை உறுதி செய்திருந்தது. 

இலங்கையிலும், பெரும்பாலும் வளர்ச்சியடைந்து வரும் உலக நாடுகளிலும், இவ்வாறான திட்டங்களின் அனுகூலங்கள் பெரும்பாலும் பெண்களில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.  

அல்லாவிடின் தமது பெருமளவான நேரத்தை நீரை சேகரிப்பதில் இவர்களுக்கு செலவிட வேண்டி இருப்பதுடன், கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை தொடர்வதை தவிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளன.

ஊழியர்களுக்கு அப்பால் தமது பங்களிப்புகளை முன்னெடுக்கும் வகையில் Brandix இனால் ‘Model Village’ எனும் நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், அதனூடாக Brandix தொழிற்சாலைகளை அண்மித்து வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் நீருடன் தொடர்புடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்வந்திருந்தது. 

பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் விற்பனையகங்கள் போன்ற சமூகத்தின் நலனுக்கு மிகவும் முக்கியமான அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் குழுமம் ஆதரவளிக்கின்றது. 

இன்று, Model Village நிகழ்ச்சியினூடாக சுமார் கால் மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன் பெறுகின்றனர்.

எமது Care for Our Own மற்றும் Model Village நிகழ்ச்சிகளுக்கு அனுகூலம் பெறுவோரின் வரவேற்பு கிடைத்திருந்தது. 

குறிப்பாக தொற்றுப் பரவலுடனான சூழலில், தூய்மை என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்ததுடன், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றியிருந்தது.

இந்த ஆண்டு உலக நீர் தினத்தை கொண்டாடும் வகையில், Brandix இனால் மேலும் 87 பூர்த்தி செய்யப்பட்ட ‘Care for Our Own’ நீர்த் திட்டங்கள், ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கு கையளிக்கப்பட்டிருந்தன. 

தேசிய சமூக நீர் விநியோகத் திணைக்களத்துடன் குழுமம் கைகோர்த்திருந்ததுடன், அதனூடாக Model Village பாடசாலைகளில் சுவர் ஓவியத் திட்டத்தையும் ஆரம்பித்திருந்தது. 

‘Water is Life’எனும் தொனிப்பொருளின் கீழ், எதிர்காலத் தலைமுறையினர் மத்தியில் இந்தத் திட்டத்தினூடாக விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அதனூடாக நீர் மூலங்களை பாதுகாப்பதற்கு அவசியமான ஆக்கபூர்வமாக மற்றும் ஈடுபாட்டுடனான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

சமூகத்துக்கான பராமரிப்பில் நீரின் முக்கியத்துவம் மற்றும் காலநிலை மாற்றத்திலிருந்து இந்த அரிய வளத்தை பாதுகாக்க வேண்டிய நிலைபேறான நடவடிக்கைகள் போன்றவற்றை Brandix புரிந்து கொண்டுள்ளது.

குழுமத்தின் சூழல்சார் நிலைபேறான கட்டமைப்புப் பணிகள் காற்று, நீர் மற்றும் புவி ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ளன. 

இன்றைய காலகட்டத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள மிகவும் சிக்கல்கள் நிறைந்த சவால்களை தீர்ப்பதற்கு ஏற்ற வகையிலமைந்த நிலைபேறான உற்பத்தியாளராக திகழ்வது பிரதான குறிக்கோளாக அமைந்துள்ளது.

வளங்கள் செம்மையாக்கம் தொடர்பில் பன்முனைப்படுத்தப்பட்ட வழிமுறை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், குழுமத்தின் இலக்கான 2023 ஆம் ஆண்டளவில் பூஜ்ஜிய நீர் விரயத்தை தவிர்க்கும் குழுமத்தின் இலக்கை நோக்கி தொடர்ந்து இயங்குகின்றது. 

அண்மைய செயற்பாடுகளில், சில தொழிற்சாலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக நீர் ஒருங்குநிலைப்படுத்தப்பட்டு, வெப்பமூட்டல், காற்றோட்டம் மற்றும் வாயு குளிரூட்டல் கட்டமைப்புகளை குளிர வைப்பதற்கு வினைத்திறனான வகையில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மற்றும் ரம்புக்கன ஆகிய பகுதிகளில் குழுமத்தின் உற்பத்திப் பகுதிகளில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள நிலையில், ஏனைய பகுதிகளுக்கு பூஜ்ஜிய திரவ வெளியீட்டு திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு Brandix எதிர்பார்க்கின்றது. மேலும், மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்ட நீரின் பயன்பாடு கழிவறை பயன்பாடுகளிலும் நீர்ப்பாசனத்திலும் பயன்படுத்தப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான ஒன்றிணைக்கப்பட்ட நடவடிக்கைகளினூடாக, 2020/21 நிதியாண்டில் குழுமம் நீர் செறிமானத்தில் 19% குறைப்பை எய்தியுள்ளது. 

Brandix இனால் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், சமூகத்துக்காகவும் நிலைபேறாண்மைக்காகவும் பராமரிப்பை வழங்குவதில் மேலும் பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கைகோர்த்து செயலாற்ற எதிர்பார்க்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57