வெளிநாடு சிகிச்சை.? ஜெயாவுக்கு காத்திருக்கும் சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம்.!

Published By: Robert

18 Oct, 2016 | 11:21 AM
image

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 வாரம் கடந்தும் அவர் இன்னமும் வீடு திரும்பவில்லை. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வந்த அப்பல்லோ நிர்வாகம் கடந்த 7 நாட்களாக எந்த அறிக்கையும் வெளியிடாமல் மௌனமாக இருக்கிறது.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலத்தில் பேசினார், மருத்துவர்களுக்கு நன்றி கூறினார், தண்ணீர் குடித்தார், வேக வைத்த ஆப்பிள் சாப்பிட்டார் என தினம் ஒரு தகவல் வந்தவாறு உள்ளது. அதே நேரம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தற்போது முன்னேறி வருவதாகவும், அவரை தற்போது உள்ள சூழ்நிலையில் சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் விரைவில் குணம் பெற வைத்துவிடலாம் என்ற தகவலும் வருகிறது.

அப்பல்லோ வட்டாரத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு கிடைத்த தகவலில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முழுவதும் குணமடைய இன்னும் எவ்வளவு நாள் ஆகுமென தெரியாது. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலைக்கு மாற்றினால், ஓரளவு சீக்கிரம் குணமாக ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக அரசிடம் பேசியதாகவும், வெளிநாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதாவை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் அதற்கான சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம் ஏற்பாடுகள் செய்ய தயாராக இருப்பதாக கூறப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13