மின் துண்டிப்பு 10 மணித்தியாலங்களாக நீடிக்கும் சாத்தியம் ?

Published By: Digital Desk 3

25 Mar, 2022 | 11:55 AM
image

தற்போது அமுலாக்கப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாக, மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றையதினம்  கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் தேவையான மசகு எண்ணெய் இன்மையால் மூடப்பட்டது.

நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனல்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளமையால் , கடந்த ஒரு மாத காலமாக சுழற்சி முறையில் ஆறரை மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

இவ்வாறான நிலையில் கடந்த வாரம் இந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் நாட்டில் அனைத்து தேவைக்கும் எரிபொருள் தடையின்றி விநியோகிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் மின்துண்டிப்பு தொடர்ந்தும் அமுலிலேயே காணப்படுகிறது. கடந்த இரு தினங்களாக எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் , அவற்றுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

எவ்வாறிருப்பினும் மின்துண்டிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில் , கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையமும் மூடப்பட்டுள்ளமையால் மக்கள் மேலும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாக, மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17