வெளிநாடுகளிலுள்ள ஒருசில தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டமைக்கு டொலர் நெருக்கடியே காரணம் : தாரக பாலசூரிய

Published By: Digital Desk 3

24 Mar, 2022 | 02:07 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் வரையறுக்கப்பட்ட டொலர் நெருக்கடியினை கருத்திற்கொண்டு  அரசாங்கம் வெளிநாடுகளில்  உள்ள 65 தூதுவராலயங்கள் மற்றும் துணைதூதரங்கள் குறித்து பரிசீலனை செய்துள்ளது. 

டொலர் நெருக்கடி காரணமாகவே வெளிநாடுகளில் உள்ள ஒரு சில  தூதுவராலயங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என பிராந்திய  உறவுகள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் மொஹமட் முஸம்பில் கேட்ட  கேள்விக்கு இடையீட்டு கேள்வியின் போது  எதிர்தரப்பின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல டொலர் பிரச்சினை காரணமாக வெளிநாடுகளில் உள்ள தூதுவராலயங்களை அரசாங்கம்  தொடர்ந்து மூடி வருகின்றன. இது பாரியதொரு பிரச்சினையாகும்.

சைப்பிரஸ் நாட்டில் உள்ள இலங்கை தூதுவராலயத்தையும் மூடுவதற்கு அரசாங்கம்  தீர்மானித்துள்ளது. சைப்பிரஸ் நாட்டில் சுமார் 10 ஆயிரம்  இலங்கையர்கள் தொழில் புரிகிறார்கள்.

இவர்களின் நிலைமை என்னவாகும்  என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டு கையிருப்பு வரைறுக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களையும்  தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் 65 தூதரங்கள் உட்பட துணைதூதரகங்கள் காணப்படுகின்றன. இவற்றின் சேவைகளை தொடர்ந்து பெறுவது குறித்து மீள்பரிசீலனை செய்யப்படுகிறது.

எந்த நாட்டில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் சேவையினை தொடர்ந்து பெற்றுக்கொள்ள வேண்டும்இஎந்த நாட்டில் புதிதாக தூதுவராலயங்களை நிறுவ வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாட்டில் இலங்கைக்கான தூதுவராலயம் கிடையாது.

வெளிநாடுகளில் உள்ள  தூதரகங்களை மூடும் போது அதன் சேவைகள் ஏனைய தூதுவராலயத்துடன் ஒன்றிணைத்து முன்னெடுத்து செல்லப்படுகிறது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில்  ஆபிரிக்க கண்டத்திலும் தூதுவராலயங்கள் நிறுவப்பட்டது.

ஆபிரிக்க நாடுகளில் நிறுவப்பட்டுள்ள தூதுவராலயங்கள்  குறித்து எதிர்க்கட்சியினர் தற்போது மாறுப்பட்ட தர்க்கங்களை முன்வைக்கிறார்கள்.

டொலர் நெருக்கடி காரணமாகவே வெளிநாடுகளில் உள்ள தூதுவராலயங்கள் தற்காலிகமாக முடப்பட்டுள்ளதால் அதன் சேவை பெறுநர்களுக்கு எவ்வித பாதிப்பும்  ஏற்படாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47