நூலன்ட் குழுவின் வருகை : தமிழர்களின் எதிர்பார்ப்பும் தூசு தட்டப்படும் எம்.சி.சி.யும்

24 Mar, 2022 | 01:54 PM
image

(ஆர். ராம்)

அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்­தின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான வெளியு­ற­வுத்­துறை செயலர் விக்­டோ­ரியா நூலண்ட், பாது­காப்பு கொள்­கை­க­ளுக்­கான துணைச் செயலர் அமண்டா ஜே. டொரி, தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்களுக்கான உதவிச் செயலர் டொனால்ட் லூ ஆகியோர் இரு நாள் விஜ­யம் மேற்கொண்டு நாளை  இலங்கை க்கு வருகை தரவுள்ளனர்.

இவர்கள், பங்­க­ளாதேஷ், இந்­தியா ஆகி­ய ­நாடுகளுக்கான  விஜ­யங்­களை நிறைவு செய்து கொண்ட பின்னரே இலங்­கை வரவுள்ளனர்.   

இந்தோ - பசுபிக் பங்­கா­ளி­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் அர்ப்­ப­ணிப்பு மற்றும் ஒத்­து­ழைப்பை மையப்­ப­டுத்­தி­யதே இந்தப் பய­ணத்தின் நோக்­க­மென்று விஜ­யத்தின் ஆரம்­பத்­தி­லேயே அறி­வித்தும் விட்­டனர்.

எனினும்,  இக்­கு­ழு­வி­னரின் இலங்கை விஜயம் தொடர்பில் இரு­வேறு வெளிப்­பா­டுகள் மேலெ­ழுந்­துள்­ளன. முத­லா­வது வெளிப்­பாடு தமிழ்த் தரப்பிலிருந்து வந்­துள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தலை­மை­யி­லான சட்ட நிபு­ணர்கள் குழு­வினர் கடந்த ஆண்டு நவம்­பரில் அமெ­ரிக்­கா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்­தனர்.

இதன்­போது, புலம்­பெயர் தமி­ழர்கள் சார்பில் உல­கத்­த­மி­ழர்கள் பேர­வையின் பிர­தி­நி­தி­களும் இணைந்து கொண்­டி­ருந்­தனர். 

அமெ­ரிக்­காவில் நடை­பெற்ற பல்­வேறு சந்­திப்­புக்­களின் ஈற்றில் இலங்­கையின் மனி­த­உ­ரி­மைகள், மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் குறித்த பொறுப்­புக்­கூறல் மற்றும் தேசிய பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு ஆகி­ய­வற்றை சமாந்­த­ர­மாக முன்­ன­கர்த்திக் கையாள்­வ­தற்கு அமெ­ரிக்க, இந்­திய கூட்டில் புதிய கொள்கை வகுக்­கப்­படும் என்று சுமந்­திரன் அறி­வித்­தி­ருந்தார்.

முன்­ன­தாக, 2011இல் சம்­பந்தன் தலை­மை­யி­லான குழு­வினர் அமெ­ரிக்­கா­விற்குச் சென்று சந்­திப்­புக்­களை நடத்­தி­யி­ருந்­தனர். 

இதன் விளை­வாக அமெ­ரிக்­காவின் அப்­போ­தைய, சிவில் பாது­காப்பு, ஜன­நா­யகம் மற்றும் மனித உரி­மை­க­ளுக்­கான துணை இரா­ஜாங்க செய­லாளர் மரியா ஓட்­டேரோ, தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி இரா­ஜாங்கச் செய­லாளர் ரெபேர்ட் ஓ பிளேக் ஆகியோர் 2012 பெப்­ர­வ­ரியில் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்­தனர்.

இவர்­க­ளது வருகை அந்த ஆண்டு நடை­பெற்ற ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களில் கணி­ச­மாக செல்­வாக்குச் செலுத்­தி­யி­ருந்­தது என்­பது வெளிப்­ப­டை­யா­னது.

இவ்­வா­றி­ருக்­கையில், சுமந்­திரன் குழு­வி­னரும், உலகத் தமிழர் பேர­வையின் அங்­கத்­தவர் குழுவும் கூட்­டி­ணைந்து அமெ­ரிக்­காவில் முன்­னெ­டுத்த சந்­திப்­புக்­களின் பின்னர், அமெ­ரிக்க பிர­தி­நி­திகள் சபையின் வெளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான குழு­வி­ட­மி­ருந்து இலங்­கையின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்­திற்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கு­மாறு வலி­யு­றுத்தி இரா­ஜாங்கச் செய­லாளர் அன்­டனி பிளிங்­க­னுக்கு கடிதம் அனுப்­பப்­பட்­டி­ருந்­தது.

இந்தக் கடி­தத்­தினை குறித்த குழுவின் தலை­வரும் ஜன­நாயக கட்­சியின் பிர­தி­நி­தி­யு­மான கிறி­கோரி மீக்ஸ் மற்றும் குடி­ய­ர­சுக்­கட்­சியின் பிர­தி­நி­தி­யான மைக்கல் மெக்கால் ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்­பரில் அனுப்பி வைத்­தி­ருந்­தனர்.

இலங்­கையின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விடயம் இரா­ஜாங்கச் செய­லாளர் அன்­டனி பிளிங்­கனின் கவ­னத்­திற்கு உடன் எடுத்துச் செல்­லப்­பட்­டமை சந்­திப்­புக்­களின் விளை­வாக கொள்ள முடியும் என்று உல­கத்­த­மிழர் பேர­வையின் சிரேஷ்ட ஆய்­வாளர் பவன் பவ­குகன் தெரி­விக்­கின்றார்.

அதே­நேரம், இலங்­கைக்கு வருகை தந்­துள்ள தெற்கு, மத்­திய ஆசிய விவ­கா­ரங்­களுக்கான உதவிச் செயலர் டொனால்ட் லூ ஏற்­க­னவே சுமந்­திரன் உள்­ளிட்ட குழு­வி­ன­ருடன் சந்­திப்­புக்­களை நடத்­தி­ய­வ­ரா­கவும் உள்ளார்.

மேலும் குறித்த குழு­வினர் இந்­தி­யா­விற்குச் சென்று விட்­டுத்தான் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருக்­கின்­றனர் ஆகவே,  சுமந்­திரன் மற்றும் பவ­கு­கனின் கருத்­துக்­களின் அடிப்­ப­டையில் இக்­கு­ழு­வி­னரின் விஜ­யத்தில் தமிழ்த் தரப்பு அதி­க­மான எதிர்­பார்ப்­பினைக் கொண்­டி­ருக்­கின்­ற­மை­யா­னது கடந்­த­கால பின்­ன­ணி­களின் அடிப்­ப­டையில் நியா­ய­மா­னது.

இவ்­வா­றி­ருக்­கையில் இரண்­டா­வது வெளிப்­பாடு தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து மேலெ­ழுந்­துள்­ளது.

இதற்கு, ராஜ­ப­க்்ஷ அர­சாங்­கத்­தி­லி­ருந்து அண்­மையில் வெளியேற்­றப்­பட்­டுள்ள விமல், கம்­மன்­பில, வாசு உள்­ளிட்ட 11 பங்­கா­ளிகள் தான் கார­ண­மாக இருக்­கின்­றனர்.

நிதி அமைச்சர் பஷில் ராஜ­ப­க்ஷவுக்கு எதி­ரான அவர்­களின் பிர­சா­ரத்தில் மீண்டும் எம்.சி.சி. உடன்­ப­டிக்கை என்­பது பிர­தான இடத்­தினை கொண்­டி­ருக்­கின்­றது.

குறித்த அணி­யினர் எம்.சி.சி.உடன்­ப­டிக்கை விட­யத்­தினை தூக்­கிப்­பி­டிப்­ப­தற்கு கார­ணங்கள் இல்­லா­ம­லில்லை.

500மில்­லியன் டொலர்கள் பெறு­ம­தி­யான எம்.சி.சி.உடன்­ப­டிக்கை பற்­றிய உரை­யாடல் நேபா­ளத்தில் 2017இல் ஆரம்­பிக்­கப்­பட்டு அதற்­கான சட்­ட­மூலம் 2019இல் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போதும் உள்­நாட்டு எதிர்ப்­புக்­க­ளுக்கு மத்­தியில் கடந்த பெப்­ர­வரி 27இல் தான் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இதன் பின்­ன­ணியில் நூலண்ட் உள்­ளிட்­ட­வர்கள் தான் செயற்­பட்­டுள்­ளார்கள். அவ்­வி­த­மா­ன­வரே இலங்கை வரு­கின்றார். 

இலங்­கையில் அமெ­ரிக்க பிர­ஜா­வு­ரி­மையைக் கொண்­டி­ருக்கும் பஷில் ராஜ­ப­க்க்ஷ நிதி அமைச்­ச­ராக  இருக்­கையில் எம்.சி.சி.உடன்­ப­டிக்­கையை அவர் விரைந்து அமு­லாக்­கி­வி­டுவார் என்­பது தான் விமல் உள்­ளிட்ட அணி­யி­னரின் குற்­றச்­சாட்­டாக உள்­ளது.

மறு­பக்­கத்தில், உள்­நாட்டில் பொரு­ளா­தார நெருக்­க­டியால் அத்­தி­யா­வ­சி­ய­மான பொருட்­களைப் பெறு­வ­தற்குகூட பொது­மக்கள் நீண்ட வரி­சை­களில் நின்­ற­வாறு, அன்­றாட வாழ்க்­கையை கொண்டு நகர்த்த முடி­யாதும் திண்­டாடி வரு­கின்­றார்கள்.

நாட்டின், அந்­நி­யச்­செ­லா­வணிக் கையி­ருப்பு பெப்­ர­வ­ரியில் 2.31 பில்­லியன் டொலர்­க­ளாக வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள நிலையில், இறக்­கு­ம­தி­க­ளுக்­கான டொலர்­களை வழங்­க ­மு­டி­யாது தவித்து வரு­கின்­றது அர­சாங்கம்.

அதே­நேரம், கடந்த மாத நிறைவில் பண­வீக்கம் 15.1 சத­வீ­த­மா­கி­யுள்­ள­தோடு,  உண­வுப்­பொ­ருட்­க­ளுக்­கான விலை­யு­யர்வு ஆசி­யா­வி­லேயே அதி­க­மாக 25.7 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. 

இந்­தாண்டு இறு­திக்குள் 6.9 பில்­லியன் டொலர்கள் பெறு­ம­தி­யான வெளிநாட்டுக் கடன்­களைச் செலுத்த வேண்­டி­யுள்­ள­தோடு மொத்தக் கடன்­களின் பெறு­ம­தி­யாக 51 பில்­லியன் டொலர்கள் மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து மீண்டு, தமது குடும்ப ஆட்சி அதி­கா­ரத்­தினை தக்­க­வைத்­தாக வேண்­டு­மென்­பதே ராஜ­ப­க்க்ஷக்­களின் விருப்­ப­மாக உள்­ளது. 

அதனால் தான், சர்­வ­தேச நாணய நிதி­யத்­திடம் செல்­வ­தில்லை என்று இது­கால வரை­யிலும் பற்­றிப்­பி­டித்து வைத்­தி­ருந்த கொள்­கைக்கு நேரெ­தி­ராக அவர்கள் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளார்கள்.

இத­ன­டிப்­ப­டையில் எம்.சி.சி.உடன்­டிக்­கையை செய்து கொள்­வதால் உத்­தேச 480மில்­லியன் டொலர்கள் அர­சாங்­கத்­திற்கு கிடைப்­ப­தற்கு வாய்ப்­புக்கள் ஏற்­படும். தற்­போ­தைய நிலையில் அது அர­சாங்­கத்­திற்கு பேரு­த­வி­யா­கவே இருக்கும் என்­பதால் விமல் அணி­யி­னரின் கணிப்பில் தவ­றில்லை.

2005இல் சந்­தி­ரி­காவின் ஆட்­சி­யின்­போது எம்.சி.சி நிறு­வ­னத்தின் அப்­போ­தைய பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யான போல் அப்ல்­கிராத் குழு­வி­ன­ருடன் நடை­பெற்ற பேச்­சுக்­களில் உடன்­ப­டிக்­கையை மேற்­கொள்­வதில் அப்­போது பிர­த­ம­ராக இருந்த மஹிந்த ராஜ­பக்­க்ஷ ஆர்வம் காண்­பித்­த­தாக, போல் அப்ல்­கிராத் கூறி­யுள்ளார்.  

மேற்­படி பேச்­சு­வார்த்­தை­களில் காணப்­பட்ட இணக்­கப்­பாட்­டுக்கு அமை­வாக 2008இல் உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­தி­டு­வ­தற்கு அனைத்து நட­வ­டிக்­கை­களையும் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட பின்னர் மஹிந்த எடுத்­தி­ருந்தார். 

இருந்­த­போதும், 2007ஆம் ஆண்டு டிசம்­பரில், மனித உரிமை நிலை­மைகள் மோச­ம­டைந்­ததை அடுத்து நிதி உத­வியை இலங்­கைக்கு வழங்­கா­தி­ருக்க எம்.சி.சி நிறு­வனம் தீர்­மா­னித்­தது என்று அமெ­ரிக்க காங்­கிரஸ் அறிக்­கை­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

தற்­போதும், பிர­த­ம­ராக மஹிந்­தவே உள்ளார் ஆனால், அவ­ருக்கு அப்­போ­தி­ருந்த ஆர்வம் இப்­போது உள்­ளதா என்­பது கேள்­விக்­கு­ரி­ய­தா­கின்­றது.  

கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் பொரு­ளி­யல்­துறை பேரா­சி­ரியர் லலித்தசிறி குணருவன் தலைமையில் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழுவால் எம்.சி.சி.உடன்படிக்கை குறித்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபயவிடம் அளித்துள்ள நிலையில் அவரின் நிலைப்பாடு பிரதானமானது.

அதேநேரம், இதுவரையில், 49 நாடுகளில் கைச்சாத்திடப்பட்டுள்ள 65 எம்.சி.சி.உடன்படிக்கை இலங்கையில் ஆழமாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் அலெய்னா டெப்லிஸ் பகிரங்கமாகவே கூறியுள்ள நிலையில் அரசியலமைப்பு சபையின் அனுமதியை பெற்று பாராளுமன்றில் சட்டமாக்க முடியுமா என்பதும் முக்கியமான விடயமாகின்றது. 

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் வறுமை நிலையைப் போக்கவும், அந்நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக உள்ள விடயங்களை நீக்குவதற்காகவும் கடன் அற்ற தொகையாக வழங்கப்படும் எம்.சி.சி. நிறுவனத்தின் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை மீள விண்ணப்பிக்கும் போதே அந்த நிறுவனம் அதற்கான ஏதுநிலைகள் தகுதிகள் குறித்து  மீளாய்வுடன் மெளனம் கலைக்கும்.  அதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22