வரவு – செலவு திட்டத்தை மறுபரிசீலனை செய்து புதிய வரவு - செலவு திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - மைத்திரிபால சிறிசேன

Published By: Digital Desk 3

24 Mar, 2022 | 12:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார  ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் காணப்படவில்லை. வரவு – செலவு திட்டத்தை மறுபரிசீலனை செய்து புதிய வரவு - செலவு திட்டம் ஊடாக அரசாங்கம்  நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி மாநாட்டில் யோசனை முன்வைத்தார்.

பொருளாதார உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி நட்பு நாடுகளின் இராஜதந்திரிகளுடன் விசேட மாநாட்டை நடத்த வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மாற்றுதிட்டங்களை விரைவாக செயற்படுத்துவது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு பொருளாதார நெருக்கடியினையும், அரசியல் நெருக்கடியினையும் எதிர்க்கொண்டுள்ளது என்பதை அரசாங்கம் முதலில் ஏற்றுக்கொள்ள  வேண்டும். நாட்டின் தற்போதைய பொருளாதார பாதிப்பு,பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து அரசாங்கம் நாட்டு மக்களிடம் உண்மையினை பகிரங்கப்படுத்த வேண்டும்.

பொருளாதார பாதிப்பில் இருந்து நாட்டை மீட்பதற்கு இதுவரையான காலப்பகுதியில் பல ஆலோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு எந்தளவிற்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. நாட்டின் நிதி நிலைமை குறித்து துறைசார் நிபுணர்களின் கருத்துகளுக்கு நிதியமைச்சு முதலில் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

நாணய அச்சிடலை அரசாங்கம் முதலில் மட்டுப்படுத்த வேண்டும். நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியினை அதிகரிக்க சகல அமைச்சுக்கள் ஊடாக வினைத்திறனான திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். நட்டமடையும் அரச நிறுவனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துதல் வேண்டும்.

அரச செலவினத்தை குறைத்தல் அவசியமாகும் அதற்காக தற்போதைய அமைச்சரவையின் எண்ணிக்கையை குறைத்து அமைச்சின் விடயதானங்களை ஒருமுகப்படுத்தல் வேண்டும். நாட்டின் நிதி நிலைமை குறித்து பாராளுமன்றிற்கு உண்மை விடயங்களை நிதியமைச்சு தொடர்ந்து முன்வைக்க வேண்டும்.

தற்போது அமுலில் உள்ள விவசாய கொள்கை முழு விவசாய துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.சேதன பசளை கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும். விவசாயத்துறையை மேம்படுத்த இரசாயன உரம் வழங்கப்பட வேண்டும்.

தற்போது அமுலில் உள்ள வரவு- செலவு திட்டம் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அமையாது.ஆகவே வரவு செலவு திட்டத்தை மீள்திருத்தம் செய்து புதிய வரவு செலவு திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும். 

எரிபொருள் பிரச்சினை நாட்டில் தீவிரமடைந்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தினால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.நடைமுறைக்கு பொருந்தும் வகையில் எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

பொருளாதார உதவியை பெற ஜனாதிபதி நட்பு நாடுகளின் இராஜதந்திரிகளுடன் விசேட மாநாட்டை விரைவாக நடத்த வேண்டு;ம் என்பதை விசேடமாக வலியுறுத்துகிறேன். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் மாற்று புதிய திட்டங்களை செயற்படுத்துவது கட்டாயமாகும்.

அரசாங்கத்தின் கொள்முதல் தொடர்பில் பல முறைப்பாடுகள் காணப்படுகின்றன.அரச ஊழல் குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள். தேசிய பெறுகை ஆணைக்குழு,கணக்காளர் நாயகம் ஆணைக்குழு ஆகிய ஆணைக்குழுக்களை அரசாங்கம் மீள ஸ்தாபிக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக முன்னெடுக்க வேண்டிய தீர்மானங்கள் குறித்து சுதந்திர கட்சி 22 யோசனைகளை முன்வைத்துள்ளது அந்த யோசனைகளை அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி செயற்படுத்துமாறு வலியுறுத்துகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41