ராஜபக்ஷக்களை துரத்தியடிக்க மக்கள் தயாராகிவிட்டனர் - நுகேகொட ஆர்ப்பாட்டத்தில் அநுரகுமார 

23 Mar, 2022 | 11:09 PM
image

(எம்.மனோசித்ரா)

ராஜபக்ஷக்கள் அனைவரையும் அரசியலிலிருந்து வெளியேறுமாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்கள் மாத்திரமின்றி , எரிபொருள் , மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசையில் காத்திருக்கும் மக்கள் போராட ஆரம்பித்துள்ளனர். 

May be an image of 4 people and people standing

எனவே தற்போது ராஜபக்ஷக்கள் ஆட்சியிலிருந்து வெளியேற நேரம் வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

May be an image of one or more people, people standing, people walking, outdoors and crowd

மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வினை வலியுறுத்தியும் , அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் '74 வருட சாப கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - மக்களை துன்புறுத்தும் அரசாங்கத்தை துரத்தியடிப்போம்' என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி புதன்கிழமை (23) நுகேகொடையில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தது.

May be an image of one or more people, people standing, outdoors and crowd

தெல்கட சந்தியிலிருந்து மாலை 3 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு நுகேகொட சந்திவரை பேரணியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சென்றனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இவ்வாறு பேரணியாக வருகை தந்தமையின் காரணமாக தெல்கட சந்தியிலிருந்து , நுகேகொட சந்திவரையான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

May be an image of one or more people, people standing, crowd and outdoors

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ராஜபக்ஷக்கள் ஆட்சியை விட்டுச் செல்ல வேண்டிய நேரம் நெருங்கியுள்ளது. 

May be an image of one or more people, people standing, outdoors and crowd

ஆர்ப்பாட்டங்களில் மாத்திரமின்றி எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் இதனை வலியுறுத்தி போராட ஆரம்பித்துள்ளனர். 

18 மாதங்களில் 21 வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டு மீளப் பெறப்பட்டுள்ளன.

May be an image of one or more people, people standing, outdoors and crowd

ஆனால் டொலர் நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. 

இதன் காரணமாக சில கப்பல்கள் துறைமுகத்திற்கு வர மறுக்கின்றன. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

May be an image of 1 person, walking, standing, crowd and outdoors

ராஜபக்ஷக்கள் மாத்திரமின்றி இதற்கு முன்னர் நாட்டை ஆட்சி; செய்த அனைத்து ஆட்சியாளார்களும் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்த்துள்ளனர்.

தற்போது மின்சாரத்துறையையும் வெளிநாடுகளுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசியல் அடிமைகளால் நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 

May be an image of person, child, walking, standing, crowd and outdoors

இவர்கள் நாட்டில் சட்டத்தை மீறி செயற்பட்டுக் கொண்டிக்கின்றனர். இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். 

அதற்கு மக்களாட்சியை ஸ்தாபிக்க வேண்டும். அதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். அடுத்து அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்றார். 

May be an image of 1 person, standing, crowd and outdoors

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37