சீனாவுடன் தீர்க்க முடியாத பிரச்சினையை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது : அரசாங்கத்திற்கு ரணில் ஆலோசனை

Published By: Digital Desk 4

23 Mar, 2022 | 10:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்ள முன்னர் அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்துள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும்.

சீனாவுடன் தீர்க்க முடியாத பிரச்சினையை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம்,ஜெனிவா ஆகிய தரப்புக்களுடன் இணக்கமாக செயற்படுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

May be an image of 1 person, standing and indoor

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நிதியமைச்சர் ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றில் விசேட உரையாற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் புதன்கிழமை (23) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது.பொருளாதார மீட்சிக்கான யோசனைகளை அரசாங்கத்திடம் பலமுறை முன்வைத்துள்ளோம்.திறந்த பொருளாதார கொள்கையினை அரசாங்கம் முறையாக செயற்படுத்தியுள்ளதா என்ற கேள்வியை முதலில் முன்வைக்கிறேன்.

தவறான விவசாய கொள்கையினால் விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. 25 சதவீத சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மீள வேண்டுமாயின் குறைந்தது 5வருட காலத்தை உள்ளடக்கிய பொருளாதார கொள்கை திட்டத்தை வகுக்க வேண்டும்.

தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கையின் மீது முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.அரசாங்கம் கொள்கை அடிப்படையில் செயற்பட வேண்டும்.நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் முறையான விவாதம் முன்னெடுக்கப்பட்டு அதனை அடிப்படையாகக் கொண்டு தீர்வு தீர்மானங்களை துரிதமாக செயற்படுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சமர்ப்பித்துள்ள அறிக்கையை நிதியமைச்சர் இதுவரையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை.பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையிலாவது அரசாங்கம் சர்வ கட்சி கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்தும்,வெளிநாடுகளில் பெற்றுக்கொண்டுள்ள நிவாரண நிதி தொடர்பிலும் நிதியமைச்சர் பாராளுமன்றில் ஒவ்வொரு மாதமும் உரையாற்ற வேண்டும்.நிதி நிpலைமை  தொடர்பில்  நிதியமைச்சரும்,மத்திய வங்கியும் குறிப்பிடும் கருத்துக்கள் வேறுப்பட்டவையாக காணப்படுகின்றன.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளார்கள்.வரிசையில் தோற்றம் பெறும் முரண்பாடுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு 50 சதவீதமாவது நிவாரணம் வழங்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது.நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளும் வரை இந்தியா,சீனா,ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்ளும் முயற்சியினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

சர்வதேச நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்ள முன் முதலில் சர்வதேச நாடுகளுடன் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவான தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.அரசாங்கம் சீனாவுடன் தீர்க்க முடியாத பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியம்,ஜெனிவா விவகாரம் ஆகிய தரப்புக்களுடன் சாதகமாக செயற்பட முயற்சிக்க வேண்டும்.

ஜனாதிபதி,மற்றும் அரசாங்கம் தொடர்பில் பாராளுமன்றம் முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.நிதியமைச்சர் பாராளுமன்றிற்கு எந்நிலையிலும் ,எவ்வேளையிலும் பொறுப்புக் கூற வேண்டும்.அனைத்து தரப்பினரும் குறிப்பாக பாராளுமன்றில் ஒருமித்து செயற்பட்டால் மாத்திரமே பொருளாதார நெருக்கடியினை வெற்றிக்கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08