அதிகாரத்திலுள்ள கோட்டாவினால் செய்ய முடியாததை சஜித் செய்துவிட்டாரென என மக்கள் போற்றுவர்- ஜோன்ஸ்டன்

Published By: Digital Desk 3

23 Mar, 2022 | 10:11 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் எரிபொருள், எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் என எதிர்க்கட்சி தலைவர் கூறுகின்றார். அதிகாரத்தில் இல்லாத அவரால் அவ்வாறு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் அதனை தயவுசெய்து எமக்காகவும் நாட்டுக்காகவும் பெற்றுக்கொடுங்கள், நீங்கள் அவ்வாறு செய்து காட்டினால் அதிகாரத்தில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் செய்ய முடியாததை சஜித் செய்து காட்டிவிட்டார் என மக்கள் உங்களை போற்றுவார்கள் என ஆளுங்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23), எதிர்க்கட்சி தலைவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்கட்சியின் அழுத்தம் காரணமாக அரசாங்கம் சரியாக பயணிக்கும் என்றால் அதுவும் ஆரோக்கியமானதே. எனவே எதிர்க்கட்சி தலைவர் சபையில் இருக்க வேண்டும், அவருடன் சேர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சகலரும் இவ்வாறு செயற்பட வேண்டும். 

எரிபொருள் இல்லை என கூறும் அதே நேரத்தில் எரிபொருள் கொள்ளையும் இடம்பெறப்போவதாக கூறினார். அதுமட்டுமல்ல மூன்று நாடுகளில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க தயாராக உள்ளதாகவும் இறுதியாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார். 

இன்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு நீங்கள் குறிப்பட்ட நாடுகளின் மூலமாக எரிபொருள் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால் அது உங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே இருந்திருக்கும். மக்கள் உங்களை மதிப்பார்கள். 

நாட்டையும், மக்களையும் நேசிக்கும் எதிர்க்கட்சி தலைவர் எனவும், அரசியல் வேறுபாடு இல்லாது எமது மக்களை பாதுகாக்க முன்வருகின்றார் எனவும் கூறுவார்கள். அந்த கௌரவத்தை நீங்களே பெற்றுக்கொள்ள முடியம்.

நீங்கள் கூறியதை போன்று குறித்த மூன்று நாடுகளும் உதவி செய்யுமானால் விரைவாக அந்த உதவிகளை பெற்றுக்கொடுங்கள். உங்களுக்கு அதற்கான சக்தி  இருக்குமானால் அதனை செய்து கொடுங்கள். 

நீங்கள் எப்போது அதிகாரத்திற்கு வருவீர்கள்  என தெரியாது, இப்போது அதிகாரம் இல்லாத நேரத்திலும் பொதுமக்களுக்காக வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க முடியும் என்றால் அது மிகச்சிறந்ததாகும். 

ஆகவே எமக்கு உதவி செய்யுங்கள் என கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு நீங்கள் செய்தால் மக்களே உங்களை போற்றுவார்கள், அரசியல் பாகுபாடு இல்லாது, அதேபோல் அதிகாரம் இல்லாது குறித்த நாடுகளுடன் பேசி எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கண்டார், அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவிற்கு இது முடியாது போனது, எரிவாயு பிரச்சினையிலும் தீர்வு பெற்றுக்கொடுத்தார், அதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜப ஷவினால் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது போனது என்றே கூறுவார்கள். 

எனவே அந்த கௌரவத்தை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள் என்றே கூறுகின்றேன். யார் பலமானவர்கள், யார் பலவீனமானவர்கள் என்பதை தேர்தலில் அவதானிக்க முடியும். தேர்தலில் அதனை மக்கள் தீர்மானிப்பார்கள். முடிந்தால் நீங்கள் கூறிய விடயங்களை செய்து காட்டுங்கள். குறித்த நாடுகளில் இருந்து ஒத்துழைப்புகளை பெற்றுக்காட்டுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58