மாயமான வர்த்தகர் திடீரென பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தமையால் பரபரப்பு

Published By: Raam

18 Oct, 2016 | 10:21 AM
image

(எஸ்.என்.நிபோஜன்)

கடந்த 6 நாட்களாக காணாமல்போன வர்த்தகர் ஒருவர் தீடீரென கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று பகல் சரணடைந்தமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொம்மந்தரை வல்வெட்டித்துறைச் சேர்ந்த கிளிநொச்சியின் பிரபல வர்த்தகரான  கிருஸ்ணசாமி ரதீசன் (வயது36) கடந்த புதன்கிழமை மதியம் 12.00 மணியிலிருந்து இவரைக் காணவில்லை என்று உறவினர்களால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டமைக்கு அமைவாக கிளிநொச்சிப் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு இருந்த நிலையில் இவர் கடத்தப்பட்டிருப்பார் என ஒரு சிலரும்  இல்லை இவர் கடன்தொல்லையினால் தலைமறைவாகி இருப்பார் என ஒரு சிலரும் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களுக்கு அமைவாக விசாரைனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில்  நேற்று  குறித்த வர்த்தகர் தானாகவே  கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்  இதனால் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்ட அவரது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அவரது பணியாளர்கள்  சந்தோசக்களிப்பிலும் ஆரவாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்பு குறித்த வர்த்தகரை கிளிநொச்சிப் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பதில்பொறுப்பதிகாரி ஆனந்த சுமணசிறி விசாரணைக்கு உட்படுத்தியத்தில் தான் தனது வேலைப்பளு காரணமாக சரியாக நித்திரைகளின்றி மன உளைச்சல்  காரணமாக  தான் செய்வதறியாது  பஸ்ஸில் ஏறி வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களிற்கு பஸ்ஸிலேயே பயணம் செய்ததாகவும் தனது மனநிலை சரியானதும் தான் இன்று கிளிநொச்சிக்கு திரும்பி உள்ளதாகவும் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் நான் கடன் காரணமாக தலைமறைவாகவில்லை எனவும் தனது வாக்குமூலத்தில் பதிவிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன 

அத்துடன் இவர்  கடன்காரணமாக தலைமறைவாகி இருந்திருப்பாரா என  எமது செய்திப்பிரிவு  கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் வினவிய போது  அவர் தங்களுக்கு பணம் தர  வேண்டும் என இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் வரவில்லை எனவும்  அவர் வர்த்தகங்கள் செய்வதனால் சுழற்சி முறையிலான சில கடன்கள் இருப்பதாக அறிய முடிகின்றது என  கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38