கோத்­தாவை முடக்கும் முயற்­சியில் அர­சு 

22 Dec, 2015 | 08:54 AM
image

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட கொலைச் சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் தடுத்து வைக்­கப்­பட்­டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு வரும் 4 இரா­ணுவ அதி­கா­ரி­களும் குறித்த கொலை­யுடன் எவ்­வித தொடர்பும் இல்­லா­த­வர்கள் என தூய்­மை­யான ஹெல உறுமை­ய கட்­சி­யின் தலைவர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவை முடக்­கு­வ­தற்கு அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் சூட்­ச­ம­மான சதித் திட்­டங்­களில் இதுவும் ஒன்­றெ­னவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

தூய்­மை­யான ஹெல உறுமை­யவின் கட்சி அலு­வ­ல­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழ­டைம இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

எமது நாடு இன்று மிக மோச­மான நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. அதனால் எமது நாட்டை காக்க உயிர் தியாகம் செய்த இரா­ணு­வத்­தினர் இன்று சர்­வ­தேச மட்­டத்­திலும் உள்­நாட்­டிலும் காட்­டிக்கொ­டுக்­கப்­ப­டு­வ­து வழ­மை­யா­ன­தொன்­றா­கி­விட்­டது.

நான் சில நாட்­க­ளுக்கு முன்னர் பரகீத் எக்­னெ­லி­கொட கொலை விவ­காரம் தொடர்பில் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்­பட்டு வரும் இரா­ணுவ புல­னாய்வு பிரிவு அதி­கா­ரி­க­ளான சம்மி கரு­ணா­ரத்ன , பிர­போத வீர­சே­கர ,சார்ஜன் மேஜர் உப­சேன, கோப்ரல் ரூப­சேன ஆகி­யோரை சிறையில் சந்­தித்­தி­ருந்தேன்.

அதன் போது அவர்கள் தாம் அப்­பா­விகள் என்றும் கொலை பற்றி தாம் எவ்­வித உண்­மை­க­ளையும் அறி­ய­வில்லை என்றும் தெரி­வித்­தனர். ப்ரகீத் எக்­னெ­லி­கொட என்­ப­வரை தாம் கண்ணால் கண்­டதும் இல்லை என தமது ஆதங்­கத்தை தெரி­வித்­தனர்.

இவர்­களின் கதை சோக­மா­னது. அத்­துடன் பயங்­க­ர­மா­னதாகும். புலிகள் இயக்­கத்தின் புலனாய்வு பிரி­வான டொஸி அமைப்பின் சிங்­கள புலி­க­ளு­டன் தொடர்­பு­களை பேணு­வ­தற்கு பொறுப்­பா­க­வி­ருந்த தவேந்­திரன் என்­பவர் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த போது அவ­ரி­ட­மி­ருந்து புலிகள் பற்­றிய தக­வல்­களை பெற்­றுக்­கொள்ளும் பொறுப்பு தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள அதி­கா­ரி­க­ளுக்கே வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இதன் போது சிங்­கள புலி­களில் ஒரு­வ­ரான பி.ரஞ்­சித என்­பவரை பிரகீத் எக்­னெ­லி­கொட என ஏற்று­க்­கொள்­ளு­மாறு குறித்த இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கு அரச தரப்­பி­லி­ருந்து அழுத்தம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.இந்­நி­லையில் இந்த அதி­கா­ரி­க­ளுக்கு ஒவ்­வொ­ரு­வரும் எவ்­வாறு சாட்­சியம் அளிக்க வேண்டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்ட கடி­தங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நால்­வ­ருக்கும் கொடுக்­கப்பட்­டுள்ள கதைகள் அனைத்­தையும் எடுத்­துப்­பார்க்கும் போது முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்த­பாய ராஜ­பக்­ஷ­வை முடக்க வைக்கும் அர­சாங்­கதின் தெளிவா­கி­ற­து. இவர்கள் நாலவர் மீதும் குற்­றச்­சாட்­டுக்கள் எவையும் இல்லை. அவர்கள் சாட்­சியம் அளிக்க வேண்­டிய விடயம் தொடர்­பி­லான ஆவ­ணங்­களை தாமே தயா­ரித்­தாக பிரதி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­கர குறிப்­பிட்­டுள்ளார்.

இதனால் இவர்கள் எவ்­வித அடிப்­படை குற்­றங்­க­ளையும் செய்­யாத நிலையில் கைது செய்­யப்­ப­டுள்­ளனர் என தெரி­ய­வந்­துள்­ளது.மேலும் அவர்­களின் குடும்­பத்­தி­னரும் தொலை­பேசி வாயி­லாக மிரட்­டப்­ப­டு­கின்­றனர். இவ்­வா­றான செயல்­க­ளினால் அர­சாங்­கத்தின் துஷ்ட நோக்­கங்கள் இரண்டு வெளிப்­ப­டை­யா­கி­ன்றன.

கோத்­த­பா­ய ராஜ­ப­க்ஷவின் கௌர­வத்தை அர­சாங்த்­தினால் சகித்­துக்­கொள்ள முடி­யா­மை­யினால் அவ­ருக்கு சேறு பூச முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. அத்­து­டன் அர­சாங்கம் ப்ரகீத் எக்­னெ­லி­கொ­டவின் கொலை­யுடன் தொடர்­பு­டைய உண்­மை­யான குற்­ற­வா­ளி­களை காப்பாற்ற முயற்­சிக்­கின்­றமை வெளிப்­ப­டை­யா­கின்­றது.

அதனால் இந்த அரசின் அமைச்சர் ஒரு­வரால் ப்ரகீத் எக்­னெ­லி­கொட கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்தேகம் எமக்கு எழுந்­துள்­ளது.நாம் இன்று அதி­கௌ­ரவம் வழங்க வேண்­டி­ய­வர்­களை அர­சாங்கம் காட்­டிக்­கொ­டுப்­பது எதற்­கா­க­வென்று கேள்­விக்­கு­றியா­கவே உள்­ளது.

அவர்­களை மிரு­கங்கள் போன்று வேட்­டை­யாடி தமது தனிப்­பட்ட அர­சியல் தேவை­களை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்­தை கேட்கிறோம் இல்லாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் எதிர்ப்பர். முன்னர் சந்திரிகா அரசும் இது போன்று செயற்பட்டதையும் மறந்துவிடக்கூடாது.

இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயம். இவர்­க­ளை விட இடி அமீன் நல்லவர் என்றே கூற வேண்டும் இராணுவத்தினை தாக்கிவிட்டு அரசாங்கம் நிலைக்கும் என்ற கனவில் அரசாங்கம் செயற்பட கூடாது என்ற அறிவுறுத்தலையும் விடுக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08