கண்டி திகன கலவரம் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை - சரத் வீரசேகர

Published By: Digital Desk 3

23 Mar, 2022 | 02:13 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் எமது அமைச்சினால் முறையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

என்றாலும் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவருக்கு எதிராகவும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கின்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளும் கட்சி உறுப்பினர் எம். முஸம்மில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

2018 மார்ச் 5ஆம் திகதி கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் எமது அமைச்சினால் முறையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை, என்றாலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு  சந்தேக நபர்களை கைதுசெய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கண்டி மேல் நீதிமன்றத்தில் தற்போதும் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பல்லேகல பொலிஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு கண்டி நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருன்றது. அத்துடன் அந்த கலவரத்துடன் சம்பநத்ப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கின்றோம்.

அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கு புலனாய்வு அதிகாரிகளை பயன்படுத்தி அடிப்படைவாத கருத்துக்களை தெரிவிப்பவர்கள், அதன்பால் செயற்படுபவர்கள் தொடர்பில் கைதுசெய்து, அவர்களின் கடந்தகால செயற்பாடுகளை தேடிப்பார்த்து, தேவை ஏற்படின் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அதனால்தான் இவ்வாறான சம்பவங்கள் அதன் பின்னர் இதுவரை இடம்பெறாமல் இருக்கின்றது என்றார்.

இதன்போது எம்.முஸம்மில் இடையீட்டு கேள்வியை முன்வைத்து தெரிவிக்கையில்,

கண்டி திகன கலவரம் போன்ற சம்பவங்கள் சஹ்ரானின் தாக்குதலுக்கு ஆட்களை இணைத்துக்கொள்ள உந்துசக்தியாக இருந்ததாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என்பது பாரிய பிரச்சினையாகும்.

அதனால் இவ்வாறான சம்பவம் இடம்பெறுவதற்கு தூண்டப்படுவதற்கான காரணங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுமா என கேட்டதற்கு பதிலளிக்கையில்,

எனது அமைச்சு கடந்த வருடம் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டதாகும். கடந்த காலங்களில் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சுக்கு கீழே இருந்து வந்தது.

அதனால் எமது அமைச்சினால் இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. இந்த கலவரம் காரணமாக 144 வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன. என்றாலும் இவற்றுக்கு தேவையா நட்டஈடு வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பாராளுமன்ற குழுவின் அறிக்கையின் பரிந்துரை தொடர்பில் கடந்த வருடம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜனாதிபதி, 57 பரிந்துரைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தார். 

அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தற்போது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு சில காலம் சென்றாலும் பரிந்துரைகள் அனைத்தையும் செயற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40