இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் சாதனையை முறியடித்த அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி

23 Mar, 2022 | 01:47 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி தொடர்ச்சியான அதிக வெற்றிகளை பதிவு செய்த செய்த அணியாக அவுஸ்திரேலிய மகளிர்  கிரிக்கெட் அணி  சாதனை படைத்தது.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது, இதில் நேற்யை தினம் நடைபெற்ற தென் ஆபிரிக்க  மகளிர் கிரிக்கெட் அணிக்கெதிரான  போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. 

இந்த வெற்றியின் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இரண்டாதாக துடுப்பெடுத்தாடி ‍தொடர்ச்சியாக  18 போட்டிகளில் வெற்றியீட்டி அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் சாதனை படைத்தது.

இதற்கு முன்னர் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியினர் 2005-  2006 ஆண்டு காலப்பகுதியில் 17 போட்டிகளில் வெற்றியீட்டியிருந்தமையே சாதனையாக இருந்தது.

இந்த சாதனையையே தற்போது மெக் லென்னிங் தலைமையிலான அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி முறியடித்துள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி தொடர்ச்சியான அதிக வெற்றிகளை பதிவு செய்த முதல் 5 இடங்களில் உள்ள அணிகள் விபரம்

1. அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி -18* (2018 -  தற்போது வரை)

2. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி -17  (2005- 2006)

3. இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி - 15  (2008-2009)

4.  நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி  - 15 (2015-2017)

5. மேற்கிந்தியத் தீவுகள் ஆண்கள் கிரிக்கெட் அணி - 14 (1985-1986)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35