விஜய்யின் 'பீஸ்ட்' வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 4

22 Mar, 2022 | 03:22 PM
image

விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'பீஸ்ட்' படத்தின் வெளியீட்டு திகதியை படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பீஸ்ட்' . நடிகர் விஜய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். 

இவர்களுடன் செல்வராகவன், யோகிபாபு, சைன் டாம் சாக்கோ, ஜான் விஜய், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

படத்தில் இடம்பெற்ற 'அரபி குத்து' பாடல் வெளியாகி 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, புதிய சாதனையை படைத்தது. இதனைத்தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்று விஜய் பாடிய 'ஜாலி ஓ ஜிம்கானா..' என்ற பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 20 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்து தணிக்கை குழுவின் சான்றிதழை பெற்றிருக்கும் பீஸ்ட் படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் திகதியன்று' பீஸ்ட்: உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37