அமைச்சுப் பதவியைத் தொடர மனச்சாட்சி இடமளிக்கவில்லை - நிமல் லன்சா

22 Mar, 2022 | 07:12 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் எவ்வித தயக்கமும் இன்றி அதனைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு எனது மனசாட்சி இடமளிக்கவில்லை. 

பதவி, வரப்பிரசாதங்கள் மற்றும் அதிகாரம் என்பவற்றை விட மனசாட்சி மிகவும் முக்கியமானது என்ற அடிப்படையில் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

தனது இராஜிநாமா தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டம் மற்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி பொது மக்களுக்காக உயர் சேவைகளை வழங்குவதற்காக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு பொறுப்பினை எனக்கு கையளித்தமைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது அமைச்சின் கீழ் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றும் போது எதிர்கொண்ட பிரதான பிரச்சினைகள் பல தொடர்பில் உங்களுடைய விசேட கவனத்திற்கு உட்படுத்தி கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளமையை நினைவுபடுத்த விரும்புகின்றேன். 

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகள் தற்போதும் அதே போன்று இடம்பெற்றுக் கொண்டிப்பதை நான் அறிவேன்.

எனவே அது தொடர்பில் நீங்கள் விசேட அவதானம் செலுத்தி , நாட்டினதும் பொது மக்களினதும் நலனுக்காக செயற்படுவீர்கள் என்று நம்புகின்றேன்.

நீங்கள் வழங்கிய பொறுப்பினை நிறைவேற்றிய அமைச்சராக மேலும் 3 வருடங்களுக்கும் அதிக காலம் அந்த பதவியை என்னால் தொடர்ந்தும் வகிக்க முடியும் என்ற போதிலும் , நாட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் எவ்வித தயக்கமும் இன்றி அதனைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு எனது மனசாட்சி இடமளிக்கவில்லை.

எனவே பதவி, வரப்பிரசாதங்கள் மற்றும் அதிகாரம் என்பவற்றை விட எனது மனசாட்சி மிகவும் முக்கியமானது என்ற அடிப்படையில்  கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்கின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31