ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம் - தென் ஆபிரிக்காவை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா 

Published By: Digital Desk 4

22 Mar, 2022 | 02:32 PM
image

(என்.வீ.ஏ.)

வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (22) கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்ட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவி மெக் லெனிங் குவித்த சதத்தின் உதவியுடன் தென் ஆபிரிக்காவை 5 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.

6 தடவைகள் உலக சம்பியனான அவுஸ்திரேலியா இந்த வருட மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஈட்டிய 6ஆவது நேரடி வெற்றி இதுவாகும்.

தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 272 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 45.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலிடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நொக் அவுட் சுற்றில் முதலிடத்தில் இருந்தவாறு விளையாடவுள்ளது.

இதேவேளை அணிகள் நிலையில் 2ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்கா அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமானால் எஞ்சியுள்ள மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா ஆகியவற்றுடனான போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.

தென் ஆபிரிக்காவுடனான இன்றைய போட்டியில் மெக் லெனிங் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 130 பந்துகளில் 15 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் குவித்த 15ஆவது  சதம்  அதிசிறந்த சதமாக பதிவானது. 

ஆரம்ப வீராங்கனைகளான அலிசா ஹீலி (5), ரஷேல் ஹீலி (17) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 2 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் 3ஆவது விக்கெட்டில் பெத் முனியுடன் 60 ஓட்டங்களையும் 4 ஆவது விக்கெட்டில் தஹாலியா மெக்ராவுடன் 93 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் ஏஷ்லி கார்ட்னருடன் 43 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் அனாபெல் சதர்லண்டுடன் 31 ஓட்டங்களையும் மெக் லெனிங் பகிர்ந்து தனது அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

பெத் மூனி 21 ஓட்டங்களையும் தஹாலியா மெக்ரா 32 ஒட்டங்களையும் ஏஷ்லி கார்ட்னர் 22 ஓட்டங்களையும் அனாபெல் சதர்லண்ட் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மய்ல் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ளோ ட்ரையொன் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றது.

லிஸெல் லீ (36), லோரா வுல்வார்ட் (90) ஆகிய இருவரும் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். லீயைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 118 ஓட்டங்களாக இருந்தபோது லாரா குட்ஆல் (15) ஆட்டமிழந்தார்.

எனினும் லோரா வுல்வார்ட், அணித் தலைவி சுனே லுஸ் (52) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 91  ஓட்டங்களைப்  பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

இவர்களை விட மாரிஸ்ஆன் கெப் (30 ஆ.இ.), க்ளோ ட்ரையொன் (17 ஆ. இ.) பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35