தாய்லாந்து பிரதமரை தவிர ஏனைய நாட்டு தலைவர்கள் பிம்ஸ்டெக் மாநாட்டில் மெய்நிகர் வழியாக பங்கேற்பர் - வெளிவிவகார அமைச்சர்

Published By: Digital Desk 3

22 Mar, 2022 | 10:26 AM
image

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பில் எதிர்வரும் 30ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு பன்னாட்டு (பிம்ஸ்டெக்) அமைப்பின் 5 ஆவது தலைமை மாநாட்டில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் - ஓ - சா கலந்துக்கொள்வார்.

ஏனைய நாட்டு பிரதமர்கள் மெய்நிகர் முறைமை ஊடாக மாநாட்டில் கலந்துக்கொள்வார்கள் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார  கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) தலைமை மாநாட்டினை எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கையில் நடத்த பிம்ஸ்டெக் தலைமை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

தலைமை மாநாட்டினை இலங்கையில் நடத்துவது இலங்கைக்கு சாதகமாக அமையும். பிம்ஸ்டெக் பன்னாட்டு அமைப்பின் 4ஆவது தலைமை மாநாடு 2018 ஆம் ஆண்டு நேபாளம்- காத்மண்டு நகரில் இடம்பெற்றது.

பிம்ஸ்டெக் பன்னாட்டு அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, இலங்கை, நேபாளம், மியன்மார், பூட்டான், பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளின் ஊடாக 60 சதவீத கடல்வழி போக்குவரத்து நடவடிக்கைகளும், 46 சதவீத வர்த்தக நடவடிக்கைகளும்,55 சதவீதம் கொள்கலன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

பிம்ஸ்டென் பன்னாட்டு அமைப்பில் அங்கம் வகிக்கும் 7 நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (28) இலங்கைக்கு வருகை தருவார்கள். வெளிவிவகார அமைச்சில் அவர்களுடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறும்.

அதனை தொடர்ந்து 7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கும், இலங்கையின் முக்கிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான எதிர்வரும் செவ்வாய்கிழமை (29) சந்திப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.

பிம்ஸ்டெக் பன்னாட்டு அமைப்பின் தலைமை மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை (30) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும்.

தாய்லாந்து நாட்டு பிரதமர் பிரயுத் சான் -ஓ –சா தலைமை மாநாட்டில் கலந்துக்கொள்ள இலங்கைக்கு வருகை தருவார். ஏனைய 6 நாடுகளின் தலைவர்கள் மெய்நிகர் முறைமை ஊடாக தலைமை மாநாட்டில் கலந்துக்கொள்வார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58