கவனத்தைக் கவரும் களமெழுத்து கலை

23 Mar, 2022 | 04:08 PM
image

(கும்பகோணத்தான்)

உலகம் முழுவதும் ஏராளமான கலை வடிவங்கள் இருக்கின்றன. தொன்மையான பல கலை வடிவங்கள், அக்கலைகளைக் கற்றிருக்கும் கலைஞர்களின் பெரு முயற்சியால் ஆவணப்படுத்தப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டு வருவதால், பெரும்பாலான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில் தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கற்றிருக்கும் ‘களமெழுத்து’ என்ற கலை பரந்த கவனத்தை பெற்று வருகிறது.

தொன்மை கலைகள் அனைத்தும் குறிப்பாக ஓவியங்கள், சுவரோவியங்கள் ஆகிய அனைத்தும் அக்காலகட்டத்திய மக்களின் இறை உணர்வை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்தது என்று ஒரு பிரிவினர் கலையின் வரலாற்றை விவரிக்கையில் குறிப்பிடுவார்கள்.

அந்த வகையில் தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் வசித்து வரும் குறூப்புகள், தீயடி நம்பியார் மற்றும் தைய்யம்பாடி நம்பியார் சமூகத்தைச் சார்ந்த மக்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், பரம்பரை பரம்பரையாக இந்த வகை கலையை கற்று, இதனை இன்றளவிலும் பாரம்பரிய நடைமுறைகளுடன் பின்பற்றி வருகிறார்கள்.

இதன் மூலம் இந்தக் கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடத்தியாகவும் இவர்கள் இயங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் எம்மில் பலருக்கும் ‘களமெழுத்து’ என்ற கலையை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவர். 

களமெழுத்து

கேரளாவில் ஆலயங்கள் மற்றும் புனிதப்படுத்தப்பட்ட இடங்களில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய சடங்குடன் கூடிய கலை வடிவமாகும். இத்தகைய கலை வடிவத்தில் இந்து மத கடவுள்களான காளி, பத்ரகாளி, ஐயப்பன், சிவபெருமான், நாக கடவுள் ஆகிய கடவுளின் உருவங்களை களத்தில் (தரையில்) வரைவார்கள்.

இத்தகைய உருவங்களை வரைவதற்கு முன் ஆலயத்திள்ள இறைவனின் சன்னதியின் வலது புறத்தை தெரிவு செய்கிறார்கள். அத்துடன் அரிசி மாவு, மஞ்சள் தூள், பச்சை இலைகளில் இருந்து பெறப்பட்ட பச்சைவண்ண பொடிகள், மஞ்சள் தூள் மற்றும் சுண்ணாம்பு கலந்து பெறப்பட்ட சிவப்பு வண்ண தூள் ஆகியவற்றை இத்தகைய ஓவியத்தின் போது பயன்படுத்த தயாராக வைத்திருக்கிறார்கள்.

ஓவியத்தை வரையும் போது எந்தவித கருவிகளையும் பயன்படுத்தாமல் கலைஞர்கள் தங்களது கைகளையே முற்றிலும் பயன்படுத்துகிறார்கள்.

உருவத்தை அதன் மையப்பகுதியில் இருந்து தொடங்கி வெளிப்புறம் வளரும் வகையில் ஓவியத்தை வரைகிறார்கள்.

இத்தகைய ஓவியங்கள் வரையும் முன்னரும், வரையும் போதும் எந்த கடவுளின் ஓவியத்தை வரைகிறார்களோ, அந்த கடவுளுக்குரிய மந்திரத்தை ஒருமுகமான மனதுடன் உச்சாடனம் செய்கிறார்கள்.

இத்தகைய ஓவியத்தை வரையும் போது உடனிருக்கும் குழுவினர், பாரம்பரிய மற்றும் பிரத்யேக இசை கருவிகளுடன் சில பாடல்களை பாடி இசைக்கின்றனர்.

ஓவியம் நிறைவு செய்தவுடன் நேர்த்திக்கடன் பிரார்த்தனையைக் குறிக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறுகிறது. இதன்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேங்காயை உடைக்கும் சடங்கும் நிறைவேறுகிறது.

சடங்குகள் நிறைவடைந்தவுடன் வரையப்பட்ட ஓவியம், குறிப்பிட்ட பிரத்யேக பகுதி பகுதியாகப் பிரித்து கலைக்கப்படுகிறது. பிறகு அது பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

இந்த கலையின் சிறப்பம்சம் என்னவென்று உற்று நோக்குகையில், இத்தகைய கலைஞர்கள் வரையும் கடவுளின் முகம், கை, கால், ஆபரணங்கள் ஆயுதங்கள் போன்றவை முப்பரிமாண வடிவத்தில் இடம்பெறுகிறது.

களமெழுத்து எனப்படும் இந்த கலை வடிவ ஓவியம் வரைவதற்கு இரண்டு மணித்தியாலங்கள் முதல் நான்கு மணித்தியாலங்கள் வரை செலவாகிறது. இவர்கள் வரையும் இறைவனின் உருவத்திற்கு குறிப்பிட்ட பகுதிக்கு பிரத்யேக வண்ண பொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற மரபும் உண்டு. அதனை இன்றளவும் இக்கலைஞர்கள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த கலை வடிவம் மக்களின் ஆன்மீக நம்பிக்கைக்கு உட்பட்டிருப்பதால் கலை விமர்சகர்கள் சிலர் இதனை கலையின் முழு வடிவம் என்று ஒப்புக்கொள்வதில்லை.

ஆனால் சுவரோவியத்திற்கு இணையாக தரையில் வரையப்படும் ஓவியங்களும் கலை படைப்புகள் தான் என்பது கலை ஆர்வலர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-18 12:15:34
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26
news-image

ஈழத்து லிங்காஷ்டகம் : மறந்துபோன வரலாறுகள்!...

2024-03-10 13:57:26
news-image

இன்று மகா சிவராத்திரி!  

2024-03-08 11:05:25
news-image

இன்று சர்வதேச தாய்மொழி தினம் 

2024-02-21 12:08:36
news-image

சிவானந்தினி துரைசுவாமி எழுதிய தந்தை -...

2024-02-07 13:18:00
news-image

வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் :...

2024-01-29 17:43:35
news-image

அயோத்தி ராமர் கோவிலை இந்தியப் பிரதமர்...

2024-01-22 15:53:05