பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று

Published By: Digital Desk 3

22 Mar, 2022 | 09:39 AM
image

(ஆர்.யசி)

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டை இன்று செவ்வாய்க்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  

பாராளுமன்றம் இன்று காலை  10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன் மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடைபெறும்.

நாளை 23ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் 4.30 மணி வரை காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

மார்ச் 24ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கும், துருக்கி குடியரசின் அரசாங்கத்துக்கும் இடையில் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரிவிதிப்பை நீக்குவதற்கும், வரி செலுத்தாது தட்டிக்கழித்தல் மற்றும் தவிர்ப்பு என்பவற்றைத் தடுப்பதற்குமாக 2022 ஜனவரி 28ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ் அன்றையதினம் அங்கீகரிக்கப்படவுள்ளது.

மார்ச் 25ஆம் திகதி மு.ப 10.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அனுதாபப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. 

இதன்படி, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான  பெற்றி வீரக்கோன்,  தங்கேஸ்வரி கதிரமன், எம்.எஸ்.செல்லசாமி, ஜெஸ்டின் கலப்பதி ஆகியோர் தொடர்பானஅனுதாபப் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, அன்றைய தினம் வாய்மூல விடைக்கான கேள்விகள், 27 (2) நிலையியற் கட்டளையின் கீழ் கட்சித் தலைவர்களால் கேட்கப்படும் கேள்விகள், சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள் மற்றும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை என்பவற்றுக்கு நேரம் ஒதுக்கப்படாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08