விவசாயிகளிடமும் பொது மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன் - ரொஷான் ரணசிங்க

Published By: Digital Desk 3

22 Mar, 2022 | 09:29 AM
image

(இராஜதுரை ஹஷான்)

உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டு விவசாய நடவடிக்கையில் ஈடுப்படும் விவசாயிகளிடமும், எரிபொருள், எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

பொலன்னறுவை ஹிகுரான்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாரிய நெருக்கடிகளை தற்போது எதிர்க்கொண்டுள்ளோம். மக்களுடன் உரையாற்றும் போது அவர்கள் வெளியில் புன்முறுவலுடன் கதைத்துக்கொண்டு ஆழ்மனதில் அரசாங்கத்தையும், எம்மையும் விமர்சிப்பார்கள் என்பதை நன்கு அறிவோம்.ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் சிறந்தவர்கள், மிக நன்மை, ஆம் சேர் என எவ்வளவு நாட்களுக்கு குறிப்பிட முடியும். நாட்டு மக்கள் இன்று அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

மக்களை எடுத்துக்கொண்டால் நுகர்வோர், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதுவே உண்மை. அரச சேவையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அரச சேவையாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள். பிரச்சினைகளை மக்களிடமிருந்து மறைப்பதால் எவ்வித பயனும் கிடைக்கப்பெறாது.

ஒரு சிலர் கறுப்பு வர்த்தகர்களை கொண்டு வந்து உரம் விநியோகத்தை முன்னெடுத்தார்கள். இன்று கறுப்பு சந்தை வர்த்தகர்கள் அதிகம் உழைக்கிறார்கள். சமையல் எரிவாயுவை நியாயமற்ற விலையில் விற்கிறார்கள். ஒரு மூட்டை சீமெந்தினை 3 ஆயிரத்திற்கு விற்கிறார்கள்.

நாட்டு மக்களிடம் உண்மையை குறிப்பிட வேண்டும்.தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் ஒருசில நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். தவறுகளை திருத்திக்கொண்டால் முன்னேறி செல்லலாம். பெரும்பாலான அரச நிறுவனங்களின் ஊழியர்கள் பகல் 12 மணிக்கு பிறகு சேவையாற்றுவதில்லை. இன்று அனைவரும் ஒருவரையொருவர் தன்னிச்சையாக விமர்சித்துக்கொள்கிறோம்.

கறுப்பு சந்தையில் 8 ஆயிரம் ரூபாவிற்கு உரத்தை பெற்று விவசாய நடவடிக்கையில் ஈடுப்பட்டு விளைச்சலில்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடமும், எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகிவற்றை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொது மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08