பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

21 Mar, 2022 | 02:55 PM
image

(எம்.மனோசித்ரா)

கழுபோவில பகுதியில் உணவு விற்பனை நிலையமொன்றில் சேவையாளர்களை கூரிய ஆயுத்தத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரொருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கழுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Articles Tagged Under: வைத்தியசாலை | Virakesari.lk

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 - 8.30 க்கு இடைப்பட்ட நேரத்தில் காலி வீதி - இரத்மலானை பஸ் டிப்போவிற்கு அருகில் உணவு விற்பனை நிலையமொன்றுக்குள் நுழைந்த நபரொருவர் அங்குள்ள சேவையாளர்களை அச்சுறுத்தி சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு முயற்சித்துள்ளார். இதன் போது குறித்த சந்தேகநபர் கூரிய ஆயுத்த்தினால் அங்குள்ள சேவையாளர்களை தாக்கி காயமடையச் செய்துள்ளார்.

இவ்வாறு காயமடைந்த சேவையாளர்கள் இருவர் கழுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தற்போது சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். குறித்த சந்தேகநபரால் விற்பனை நிலையத்தில் 27 000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அங்கு மீண்டும் வருகை தந்ததை அவதானித்த சேவையாளர்கள் அவரை தடுக்க முயற்பட்டுள்ளனர். இதன் போதே அவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட பின்னர் மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே கைவிட்டு , வீதியில் சென்ற முச்சக்கரவண்டியொன்றில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதன் போது குறித்த முச்சக்கரவண்டி வீதியில் பயணித்த முறையை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் அதனை நிறுத்தியுள்ளனர். இதன் போது முச்சக்கரவண்டியிலிருந்து இறங்கிய சந்தேகநபர் கத்தியொன்றை காண்பித்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி , வன்முறையான முறையில் வீதியைக் கடக்க முற்பட்டுள்ளார்.

இவரை கைது செய்ய பொலிஸார் முயற்சித்த போது அவர்களுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டது. எனவே அவர்கள் குறித்த சந்தேகநபரைக் கட்டுப்படுத்துவதற்காக அவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேகநபர் கழுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உணவு விற்பனை நிலையத்தில் கொள்ளையிட்டமை , கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர்களை காயப்படுத்தியமை உள்ளிட்டவை தொடர்பில் கல்சிஸை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44