தீராத பிரச்சினையும் தீர்க்க முடியா கட்சிகளும்

21 Mar, 2022 | 02:06 PM
image

(சத்ரியன்)

“ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியை மாற்ற நினைக்கிறது. அதனிடம் கூட நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கான உத்திகளோ கொள்கைகளோ இருப்பதாகத் தெரியவில்லை”

இரண்டரை ஆண்டுகளில் மக்களின் நம்பிக்கையை சிதைத்து, உள்ளக ஆதரவையும் இழந்து, நாட்டையும் தங்களையும் நெருக்கடிக்குள் சிக்கவைத்திருக்கிறது ராஜபக்ஷ குடும்ப ஆட்சி.

நாடு மிகமோசமான பொருளாதாரச் சிக்கலுக்குள் சிக்கிப் போயுள்ள நிலையில், இந்தச் சிக்கலைக் கடந்து செல்வதற்கான வழி என்ன என்பதில் அரசாங்கத்துக்கு உள்ளேயும் சரி, அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் மத்தியிலும் சரி - தெளிவான நிலைப்பாடு இல்லை.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த போதும், அது கடந்து சென்றிருக்கின்ற இரண்டரை ஆண்டுகளிலும், தமக்கு எல்லாம் தெரியும், தங்களால் எல்லாவற்றையும் சமாளிக்கவும் வெற்றி கொள்ளவும் முடியும் என்ற மனோநிலையே காணப்பட்டது.

இப்போதும் கூட அவர்கள், போரை வென்றது போலவே, பொருளாதார நெருக்கடியையும் வெற்றி கொள்ள முடியும் என்று கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

போரை வெல்வதற்காக இருந்த உத்திகளும், திட்டமிடலும் போல, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான உத்திகளோ, திட்டங்களோ இல்லாத நிலையில், இவ்வாறு கூறிக் கொண்டிருப்பதால் பயனில்லை.

இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க தேசிய அரசாங்கத்தை அமைக்க அரசாங்கம் பேச்சுக்களை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கசிந்திருந்தன.

ஆனால் எதிர்க்கட்சிகள் அதற்கு இணங்காத நிலையில், ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பது போல', தேசிய அரசு அமைக்க முயற்சிக்கவில்லை என்கிறது அரசாங்கம்.

‘தேசிய அரசாங்கம்’ என்ற கப்பலில் ஏறித் தாங்களும் மூழ்குவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. 

ரணில் விக்ரமசிங்கவை வைத்து இதனை சமாளிக்க அரசாங்கம் முற்பட்டது.

ரணில் விக்ரமசிங்கவை மத்திய வங்கி மோசடியுடன் தொடர்புபடுத்தி குற்றம்சாட்டிய அரசாங்கமே, இப்போது அவருடன் சமரசம் செய்து, பொருளாதார நெருக்கடியையும் அரசியல் நெருக்கடியையும் தீர்க்க முனைகிறது.

அரசாங்கத்துக்கு இப்போது தேவைப்படுவது பிரச்சினைகளுக்கான பழிகளைத் தலையில் கட்டிவிடக் கூடிய பலிக்கடாக்கள் தான் ஏற்கனவே உதய கம்மன்பிலவும், விமல் வீரவன்சவும் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டனர்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-20#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22