பலவீனமான ஆட்சியில் சிறந்த தீர்மானங்களை எடுக்க முடியாது  

21 Mar, 2022 | 10:54 AM
image

(சிவலிங்கம் சிவகுமாரன்)

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரையாற்றப்போகிறார் என்ற விடயம்  தற்போதைய சூழ்நிலையில் கேலிக்குரியதாகவும்  மறுபக்கம் கோபத்தை உருவாக்கக் கூடிய சம்பவமாகவும்  மக்களால் பார்க்கப்படுகின்றது. 

கடந்த புதன்கிழமை 16 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரையாற்றப்போகின்றார் என்ற தகவல், சமூக ஊடகங்களில் கேலிக்குரியதாகவே நோக்கப்பட்டது. 

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு ஜனாதிபதி எச்சந்தர்ப்பத்திலும் தீர்வுகளை வழங்கக்கூடியவாறு பேச மாட்டார் என்பதை பலரும் பதிவிட்டிருந்தனர். 

எதிர்ப்பார்த்தது போன்றே நாட்டின் தற்போதைய நிலைமைகளுக்கு பல காரணங்களை பட்டியல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய, மிகவும் சுருக்கமாக 12 நிமிடம் 55 வினாடிகளில் மக்களுக்கான தனது உரையை நிறைவு செய்தார்.

ஜனாதிபதியாக இருந்த போது அவர் ஆற்றிய உரைகளுக்கும் தற்போது அவர் ஆற்றும் உரைக்கும் அதிகம் வித்தியாசங்கள் காணப்பட்டன.

பதவிக்கு வந்த காலத்தில் சிங்கம் போல கர்ஜிக்கும் ஜனாதிபதி  தற்போது தளர்வடைந்து அமைதியான முறையில் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் உடல்மொழிகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

இவரது உரை முடிந்தவுடன் சமூக ஊடகமொன்றில் கலைஞர் ஒருவர் “சிங்கம் ஒன்று மியாவ் என சத்தமிட்டது” என்று  பதிவிட்டிருந்தார்

ஜனாதிபதியின் உரையானது  அவரது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் பதிவேற்றப்பட்டதில்  உணர்வுகளை வெளிப்படுத்தும் முகக் குறியீடுகள் நிறைந்திருந்தன.  அவற்றை  ஆராய்ந்தால்,   கிண்டல் தொனிக்கும் சிரிப்பு உணர்வு வெளிப்பாடுகளை தெரிவு செய்திருந்தோரின் எண்ணிக்கை 24 ஆயிரமாகும். 

கோப உணர்வு வெளிப்பாடுகளை தெரிவு செய்திருந்தவர்கள் 4 ஆயிரம் பேர். அவரது உரைக்கு விருப்பத்தை  வெளியிட்டவர்கள் மூவாயிரத்து 400 பேர் மட்டுமே. மேலும் அவ்வுரைக்கு பின்னூட்டங்களை செய்திருந்த 46 ஆயிரம் பேரும் ஜனாதிபதியின் உரையையும் நாட்டின் நிலைமையையும் மோசமாக விமர்சித்திருந்தமை முக்கிய விடயம். 

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது 15 ஆம் திகதி தலைநகரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையில் இடம்பெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமாகும். இந்த கண்டன கூட்டத்தில் ஆக்ரோஷமாக உரையாற்றியிருந்த சஜித், ஜனாதிபதித் தேர்தலை நடத்த கோரியிருந்தார்.  

இனி மற்ற பிரதான எதிரணியான ஜே.வி.பியும் அரசாங்கத்தின் பலவீனமான ஆட்சி குறித்தும் நெருக்கடி குறித்தும் எதிர்ப்புப் பேரணியை தலைநகரில் நடத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. 

அதற்கும்  ஜனாதிபதி என்ன உரையை நாட்டு மக்களுக்கு வழங்கப்போகிறார் என்பது தெரியவில்லை மொத்தத்தில் பொது ஜன பெரமுன ஆட்சியின் பலவீனம் குறித்து எதிரணியினர் நாட்டு மக்களுக்கு புதிதாக ஒன்றும் எடுத்துக் கூற வேண்டியதில்லை. அதை நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து அனுபவித்தே வருகின்றனர்.  

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-20#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13