விளாடிமிர் புட்டின் போர்க்குற்றவாளியென்றால்

21 Mar, 2022 | 10:53 AM
image

(சதீஷ் கிருஷ்ணபிள்ளை)     

     

சர்வதேச அரங்கில் மீண்டும் போர்க் குற்றம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன அதில் முதல் குற்றச்சாட்டு சுவாரஷ்யமாக அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து வந்திருக்கிறது. 

உக்ரேனில் போரைக் கட்டவிழ்த்து விட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை 'போர்க் குற்றவாளி' என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வர்ணித்துள்ளார்.

சமகால உலகில் போர்க்குற்றவாளி என்பது பாரதூரமான வார்த்தை. அதைப் போலத்தான் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம், இனச்சுத்திகரிப்பு என்கின்ற வார்த்தைகளும் காணப்படுகின்றன.

உக்ரேனிய மண் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் 'சகலதும்' நிகழ்வதாக மேற்குலகம் குற்றஞ்சாட்டுகிறது இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பொறுப்புக்கூற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.  

இந்தக் குற்றங்களை எவ்வாறு வரையறை செய்தல் என்பது தான் தற்போதுள்ள பிரச்சினையாகின்றது, ஏறத்தாழ எல்லா வகையான நெருக்கடிகளையும் வரையறை செய்யக்கூடியதாக ஐக்கிய நாடுகள் சாசனம் உள்ளது. 

இந்தச் சாசனத்தின்படி பார்த்தால், உக்ரேனை ஆக்கிரமிப்பதன் மூலம் ரஷ்யா குற்றம் செய்திருக்கிறது. 

அது ஆக்கிரமிப்புக் குற்றமாகும் அதனடிப்படையில், சர்வதேச நீதிமன்றம் விரைந்து செயற்பட்டு, உக்ரேனிய மண்ணில் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் நிலைப்பாடு தெளிவாகிறது. 

புட்டின் போரை நாடியதன் மூலம் உலக சட்ட ஒழுங்கின் அடிப்படைகள் மீறப்பட்டிருக்கின்றன என்பது பரலான குற்றச்சாட்டென்றால், அந்தக் குற்றச்சாட்டு நியாயமானதே.

சர்வதேச சட்டத்தின் கீழ் எது குற்றமாக வரையறை செய்யப்படுகிறதோ, அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புக் குற்றம் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடிய சாத்தியம் உண்டு.

சர்வதேச நீதிமன்றத்தின் வழக்குத்தொடுனர் புட்டினுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்க எது தேவையோ அதற்குரிய ஆதாரங்கள் உள்ளதாக மேலைத்தேய நாடுகள் சொல்கின்றன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-20#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22