பொதுநலவாய விளையாட்டு விழா : கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் விளையாட இலங்கை ஆடவர், மகளிர் அணிகள் தகுதி 

20 Mar, 2022 | 12:46 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஓர் அம்சமாக இடம்பெறும் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்கு இலங்கையின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

நீர்கொழும்பு கடற்கரையில் வெள்ளி (18), சனி (19) தினங்களில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழா 2022 க்கான ஆடவர் மற்றும் மகளிருக்கான ஆசிய கடற்கரை கரப்பந்தாட்ட தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணியினர் பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளனர்.

ஆடவர் பிரிவில் அஷேன் ரஷ்மிக்க, மலிந்த யாப்பா ஜோடியினரும் மகளிர் பிரிவில் சத்துரிக்கா மதுஷானி, தீப்பிகா பண்டார ஜோடியினரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பங்குபற்ற தகுதிபெற்றுள்ளனர்.

இந்த இரண்டு ஜோடியினரும் தகுதிகாண் சுற்றில் சகல போட்டிகளிலும் வெற்றிபெற்றனர்.

ஆடவருக்கான இறுதிப் போட்டியில் மாலைதீவுகளின் இஸ்மாயில் சாஜித் மற்றும் ஆதம் நசீம் ஜோடியினரை 21 - 13, 21 - 13 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் இலங்கையின் அஷேன் ரஷ்மிக்க மற்றும் மலிந்த யாப்பா ஜோடியினர் வெற்றிகொண்டு போதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

மகளிருக்கான இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் எலிஸா சொங் மற்றும் ஒங் வெய் யூ ஜோடியினரை 21 - 1, 21 - 20 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் சத்துரிக்கா மதுஷானி மற்றும் தீப்பிகா பண்டார ஜோடியினர் வெற்றிகொண்டு போதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழா எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இலங்கையின் போட்டி முடிவுகள் ஆண்கள்

எதிர் மலேசியா 2 - 0 (21 - 16, 21 - 15)

எதிர் மாலைதீவுகள் 2 - 0 (21 - 18, 21 - 15)

எதிர் சிங்கப்பூர் 2 - 0 (21 - 10, 21 - 16)

இறுதிப் போட்டி

எதிர் சிங்கப்பூர் 2 - 0 (21 - 13, 21 - 13)

பெண்கள்

எதிர்; மலேசியா 2 - 1 (15 - 21, 22 - 20, 21 - 10)

எதிர் சிங்கப்பூர் 2 - 1 (14 - 21, 21 - 18, 15 - 12)

இறுதிப் போட்டி

எதிர் சிங்கப்பூர் 2 - 0 (21 - 18, 22 - 20)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35