இந்தியாவை தோற்கடித்து மகளிர் உலகக் கிண்ண அரை இறுதியில் அவுஸ்திரேலியா

20 Mar, 2022 | 07:50 AM
image

(என்.வீ.ஏ.)

நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் 8 நாடுகளுக்கு இடையிலான 12 ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது ஐந்தாவது தொடர்ச்சியான வெற்றியை ஈட்டிய அவுஸ்திரேலியா அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முதலாவது அணியாக தகுதிபெற்றது.

Meg Lanning's throw hit Yastika Bhatia on the helmet, India v Australia, Women's World Cup, Auckland, March 19, 2022

ஆக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் சனிக்கிழமையன்று (19) கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டதன் மூலம் அரை இறுதியில் விளையாடும் தகுதியை அவுஸ்திரேலியா பெற்றது.

Alana King and Mithali Raj collide, India v Australia, Women's World Cup, Auckland, March 19, 2022

யஸ்திகா பாட்டியா, அணித் தலைவி மிதாலி ராஜ், ஹார்மன்ப்பரீத் ஆகியோர் அரைச் சதங்கள் பெற்று இந்தியாவைப் பலப்படுத்தியபோதிலும் அவற்றை விஞ்சும் வகையில் அலிஸா ஹீலி, அணித் தலைவி மெக் லெனிங் ஆகியோர் அரைச் சதங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவை வெற்றிபெறச் செய்தனர்.

Mithali Raj en route to her 12th fifty-plus score at the ODI World Cup, India v Australia, Women's World Cup, Auckland, March 19, 2022

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் மிதாலி ராஜ் 68 ஓட்டங்களையும் யஸ்டிகா பாட்டியா 59 ஓட்டங்களையும் ஹார்மன்ப்ரீத் கோர் 57 ஓட்டங்களையும் பூஜா வஸ்த்ரேக்கார் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

Yastika Bhatia drills one through the off side, India v Australia, Women's World Cup, Auckland, March 19, 2022

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் டார்சி ப்றவுண் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலனா கிங் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 280 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

Mithali Raj drives through cover, India v Australia, Women's World Cup, Auckland, March 19, 2022

அவுஸ்திரேலியா சார்பாக மெக் லெனிங் 97 ஓட்டங்களையும் அலிசா ஹீலி 72 ஓட்டங்களையும் ரஷேல் ஹேய்ன்ஸ் 43 ஓட்டங்களையும் பெத் மூனி ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் எலிஸ் பெரி 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய பந்துவீச்சில் பூஜா வஸ்த்ரேக்கார் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Darcie Brown struck early to remove Smriti Mandhana, India v Australia, Women's World Cup, Auckland, March 19, 2022

இந்தியாவை வெற்றி கொண்ட அவுஸ்திரேலியா 5 போட்டிகளில் 10 புள்ளிகளைப் பெற்ற அணிகள் நிலையில் தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கின்றது.

இதேவேளை, 4 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்திலுள்ள தென் ஆபிரிக்காவுக்கு அரை இறுதி வாய்ப்பை பெறுவதற்கு இன்னும் ஒரே ஒரு வெற்றியே தேவைப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58